ஆன்மிகம்

நிகழ்வு: குணசீலம் பிரம்மோற்சவம் நிறைவு

செய்திப்பிரிவு

குணசீல மகரிஷியின் தவத்திற்காக வைகுண்டவாசனான திருமால் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசனாக, காட்சி அளிக்கும் தலம் குணசீலம். இத்திருத்தலத்தில் 02.10.16 ஞாயிற்றுக்கிழமை முதல் 13.10.16 வியாழக்கிழமை வரை பிரம்மோற்சவம் நடைபெறும். இதில் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் அன்ன, சிம்ம, ஹனுமந்த, கருட, சேஷ, யானை, புஷ்ப, குதிரை ஆகிய வாகனங்களில் திருவீதி உலா வருவதும், திருத்தேர், திருமஞ்சனம் ஆகியவற்றிற்குப் பின்னர் ஆடும் பல்லக்கு வாகன திருவீதி உலாவுடன் இத்திருவிழா நிறைவுறும். இத்திருவிழாவில் கண்ணாடி அறைசேவை முக்கிய நிகழ்வாகக் கொண்டாடப்படுகிறது.

SCROLL FOR NEXT