ஆன்மிகம்

திருமலையில் 30-ல் வராகர் ஜெயந்தி

செய்திப்பிரிவு

திருமலை: இரண்யனை கொன்று பூதேவியை காக்க, மகா விஷ்ணு வராக சுவாமி அவதாரம் எடுத்தார். ஆதலால் திருப்பதி தல புராணத்தில், திருமலை வராக ஸ்தலம் என கூறப்பட்டுள்ளது. இதனால்தான், திருப்பதியில் ஏழுமலையானுக்கு முன், வராகருக்கு முதல் மரியாதை செலுத்தப்படுகிறது. பூஜைகள் முதற்கொண்டு, நைவேத்தியங்கள் வரை இன்றளவும் வராகருக்குத் தான் முதலில் வழங்கப்படுகிறது.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் திருமலையில் வராக ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வராக ஜெயந்தி வரும் 30-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம், வராகர் கோயிலில் கலச பூஜை, கலசாபிஷேகம் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன.

நாளை ஆன்லைனில் ஆர்ஜித டிக்கெட்: ஏழுமலையானின் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஆன்லைனில் நாளை (ஆக.24) காலை 10 மணிக்கு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் முன்பதிவு செய்துகொண்ட பக்தர்கள், வரும் அக்டோபர் மாதம் ஆர்ஜித சேவைகளில் பங்கேற்கலாம்.

SCROLL FOR NEXT