திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகாலை 2 மணிக்கு பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்ய இலவசமாக அனுமதிக்கப்படுவர். சுப்ரபாத சேவையின்போது இவர்களும் சுவாமியை தரிசித்து விட்டு வெளியே வருவார்கள். கரோனா பரவல் காரணமாக கோயில் குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கபிரதட்சணமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்ய தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இதற்கும் ஆன்லைன் முறையை தேவஸ்தானம் கையாண்டு வருகிறது. இதற்கான டோக்கன்கள் இன்று காலை 11 மணிக்கு தேவஸ்தான இணையத்தில் வெளியாக உள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் அங்கபிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்கள் இதில் தங்களின் ஆதார் அட்டையை இணைத்து டோக்கனை பெறலாம். தினமும் 750 டோக்கன் வீதம் வழங்கப்பட உள்ளது. வெள்ளிக்கிழமை அபிஷேகம் நடப்பதால் அன்று மட்டும் தவிர்க்கப்பட்டுள்ளது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மகாராஜாவின் ஜன்ம நட்சத்திரமான உத்தரபத்ரா நட்சத்திர நாளான இன்று திருமலையின் கர்நாடக சத்திரத்தில் பல்லவோற்சவம் கொண்டாடப்பட உள்ளது.