15-ம் நாளில் பச்சை மற்றும் நீல நிறப் பட்டாடையில் சயன கோலத்தில் அருள்பாலித்த அத்தி வரதர் 
ஆன்மிகம்

கூட்ட நெரிசல் குறைந்து 3 மணி நேரத்தில் சுவாமி தரிசனம்

செய்திப்பிரிவு

| அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் |

அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் 15-ம் நாளில் அத்தி வரதர் பச்சை மற்றும் நீல நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்.

கூட்ட நெரிசல் பெருமளவு குறைந்து காணப்பட்டது. கிழக்கு கோபுரத்தின் உள் பகுதியில் வழக்கம்போல் பக்தர்கள் கூட்டம் இருந்தது. அதையும் தாண்டி 3 கி.மீ பக்தர்கள் வெயிலில் வரிசையில் நிற்பர். கோபுரத்துக்கு வெளிப் பகுதியில் வரிசைகள் இல்லை. இதனால் மூன்று மணி நேரத்தில் அமைதியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரிசையில் வரும் பக்தர்களுக்கு காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

நன்கொடையாளர்கள், முக்கிய நபர்கள் செல்லும் சிறப்பு தரிசனத்துக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் அனுமதி அட்டை வழங்கப்படுகிறது. சம்பந்தமில்லா நபர்கள் தொடர்ந்து வி.ஐ.பி. நுழைவு வாயில் அருகே நிற்பது குறித்தும் பலரை சிறப்பு நுழைவு வழியாக அனுமதித்து வருவது குறித்தும் ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்தினர்.

சாலையோர தடுப்புக் கட்டைகள்

சாலையோரத்தில் இந்த விழாவுக்காக கடைகள் அமைக்கும்போது அவர்கள் சாலை நோக்கி வருவதை தடுக்க சாலையோர தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் போக்குவரத்துக்கு ஏற்படும் பெரும் இடையூறு தடுக்கப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT