மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 5-ல் குருவும், 11-ல் கேதுவும் சஞ்சரிப்பது சிறப்பு. நல்லவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி கூடும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். பயணத்தின் மூலம் முக்கியமான காரியம் நிறைவேறும். கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகமாகும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். 8-ல் செவ்வாயும் சனியும் வக்கிரமாக உலவுவதால் உடல்நலனில் கவனம் தேவை. மனதில் ஏதேனும் சலனம் ஏற்படும். இயந்திரப்பணியாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் சங்கடங்கள் சூழும்.
வாரக்கடைசியில் தெய்வப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தர்ம காரியங்களில் நாட்டம் அதிகமாகும். 20-ம் தேதி முதல் சுக்கிரன் 2-ம் இடம் மாறுவதால் பொருள்வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, உபசாரங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.
பரிகாரம்: முருகன், ஆஞ்சநேயரை வழிபடவும்.
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மெரூன்,வெண்மை, பொன்நிறம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 19, 21 (முற்பகல்), 24, 25.
எண்கள்: 3, 6, 7.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ல் கேது, 12-ல்சுக்கிரன் உலவுவது சிறப்பு. எதிர்ப்புகளைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். சுபச் செலவுகள் கூடும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள். தொலைதூரத் தொடர்பு பயன்படும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். நண்பர்கள் ஓரளவு உதவுவார்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். அலைச்சல் சற்று அதிகரிக்கும். கூட்டாளிகளால் சில இடர்பாடுகள் ஏற்பட்டு விலகும்.
புதன் பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டத்துக்கு ஆளாகாமல் தப்பலாம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. வீண் விவகாரங்களில் பிரவேசிக்க வேண்டாம். 20-ம் தேதி முதல் சுக்கிரன் உங்கள் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவது சிறப்பு. மதிப்பும் அந்தஸ்தும் உயரும்.
எண்கள்: 6, 7.
பரிகாரம்: ‘ஓம் நமோ நாராயணா’ சொல்வது சிறப்பு.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 19, 21.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல்ராகுவும், 6-ல் செவ்வாயும்; சனியும், 11-ல் புதனும்; சுக்கிரனும் உலவுவது சிறப்பு. எதிர்பாராத ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். பிள்ளைகளால் அளவோடு நலம் ஏற்படும். புதியவர்கள் உங்களுக்கு நலம் புரிவார்கள். பயணத்தின் மூலம் முக்கியமான எண்ணம் நிறைவேறும். பொறியியல் துறை லாபம் தரும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் செழிப்பான சூழ்நிலையைக் காண்பார்கள்.
கலைத்துறையினருக்கு வாரம் முழுவதும் விசேஷ்மாக அமையும். புதிய முயற்சிகள் கைகூடும். நண்பர்கள், உறவினர்கள், பங்குதாரர்கள் உதவி புரிவார்கள். கணவன் மனைவி உறவு நிலை சீராகவே இருந்துவரும். தந்தை நலனில் கவனம் தேவை. குரு 3-ல் இருப்பதால் பொருளாதார நெருக்கடி ஏற்படும்.
பரிகாரம்: விநாயகர், சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடவும்.
எண்கள்: 4, 5, 6.
நிறங்கள்: கறுப்பு, பச்சை, வெண்மை.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 19, 21, 24.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 5-ல் செவ்வாயும், 10-ல் புதனும், 11-ல் சூரியனும் சஞ்சரிப்பது சிறப்பு. குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். பணவரவு அதிகமாகும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். நிலம், மனை, வீடு, வாகனங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். நல்லவர்கள் உற்ற துணையாக இருப்பார்கள். பேச்சில் திறமை கூடும்.
அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். தந்தையால் அனுகூலம் ஏற்படும். அரசாங்க காரியங்கள் நிறைவேறும். எதிரிகள் அடங்கிப்போவார்கள். 20-ம் தேதி முதல் பொருளாதார நிலையில் வளர்ச்சி வரும்.
எண்கள்: 1, 3, 5, 6, 9.
திசைகள்: வடகிழக்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: பொன்நிறம், ஆரஞ்சு, சிவப்பு.
அதிர்ஷ்டமான தேதிகள்: சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடுவதும் சிறப்பு.
பரிகாரம்: மே 19, 21, 24.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் சூரியன் 10-ல் உலவுவது சிறப்பு. சுக்கிரனும் அனுகூலமாக இருக்கிறார். குரு ஜன்ம ராசியில் இருந்தாலும் 5, 7, 9-ம் இடங்களைப் பார்ப்பது நல்லது. முக்கியமான தகவல் ஒன்று வந்து சேரும். நண்பர்கள் அளவோடு உதவுவார்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். முக்கியமானவர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அரசுப்பணியாளர்கள் நிலை உயரப் பெறுவார்கள். அலைச்சல் சற்று அதிகரிக்கும். பிள்ளைகள் நலம் சீராகவே இருந்துவரும்.
வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் ஏற்படும். தந்தை சம்பாதித்த பொருட்கள் உங்களுக்குக் கிடைக்கும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். 20-ம் தேதி முதல் சுக்கிரன் 10-ம் இடம் மாறினாலும், தன் சொந்த வீட்டில் உலவும் நிலை அமைவதால், வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கூடிவரும்.
பரிகாரம்: சர்ப்ப சாந்தி செய்துகொள்ளவும். விநாயகர், துர்க்கையைத் தொடர்ந்து வழிபடவும்.
நிறங்கள்: சிவப்பு, இளநீலம், வெண்மை.
எண்கள்: 1, 6. திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 19, 21, 24.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய்; சனியும், 6-ல் கேதுவும், 8-ல் புதன்; சுக்கிரனும் உலவுவது நல்லது. குடும்பத்தில் குதூகலம் கூடும். பேச்சாற்றல் வெளிப்படும். முக வசீகரம் உண்டாகும். பொருளாதார நிலை ஓரளவு வளர்ச்சி பெறும். எதிர்பாராத பொருள் வரவுக்கும் இடமுண்டு. இயந்திரப் பணிகள் லாபம் தரும். பொறியாளர்களது நிலை உயரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
நிலபுலங்கள் சேரும். மாணவர்களது நிலை உயரும். மாதர்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். ஆன்மிகப்பணியாளர்களுக்கு மனத்தெளிவு உண்டாகும். வியாபாரிகள் வளர்ச்சிக் காண்பார்கள். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு வரவேற்பு கூடும். 20-ம் தேதி முதல் சுக்கிரன் 9-ம் இடம் மாறுவது விசேஷம். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தான, தர்மப்பணிகளிலும் தெய்வப்பணிகளிலும் ஈடுபாடு கூடும்.
எண்கள்: 5, 6, 7.
பரிகாரம்: சிவபெருமான், பராசக்தியை வழிபடுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 19, 21, 24.
திசைகள்: வடக்கு, வடமேற்கு, தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பச்சை, மெரூன், இளநீலம்.