திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பர், சூரிய நாராயணன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

 
ஆன்மிகம்

நவராத்திரி பிரம்மோற்சவம் 7-ம் நாள் விழா: சூரிய, சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பர் உலா

என். மகேஷ்குமார்

திருமலை: திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் நவராத்திரி பிரம்​மோற்​சவ விழா கடந்த 12-ம் தேதி கோலாகலமாக தொடங்​கியது.

இவ்​விழா​வின் 7-ம் நாளான நேற்று காலை சூரிய பிரபை வாக​னத்​தில் மலை​யப்​பர் சூரிய நாராயணராய் எழுந்​தருளினார். 4 மாட வீதி​களில் 14 குழு​வினை சேர்ந்த 411 நடன கலைஞர்​கள் நடனங்​களை ஆடி பக்​தர்​களை கவர்ந்​தனர்.

இரவு சந்​திர பிரபை வாக​னத்​தில் மலை​யப்​பர் எழுந்​தருளினார். லேசான மழை பெய்த போதிலும் பக்​தர்​கள் திரண்டு வந்து வாகன சேவையை கண்டு களித்​தனர்.

இந்த நிகழ்ச்​சிகளில் ஜீயர் குழு​வினர், தேவஸ்தான அதி​காரி​கள், திரளான பக்​தர்​கள் பங்​கேற்​றனர். நவ​ராத்​திரி பிரம்​மோற்​சவத்​தின் 8-ம் நாளான இன்று காலை தங்க தேரோட்​டமும், இரவு குதிரை வாகன சேவையும் நடை​பெற உள்​ளது.

இதனை தொடர்ந்து பிரம்​மோற்​சவத்​தின் நிறைவு நாளான நாளை காலை கோயில் அருகே உள்ள தெப்​பக்​குளத்​தில் சக்​கர ஸ்நான நிகழ்ச்சி நடை​பெற உள்​ளது. இத்​துடன் நவ​ராத்​திரி பிரம்​மோற்​சவ​ம் நிறைவடைகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT