கந்தக் கடவுளின் களியாட்டமே கந்த புராண நிகழ்வுகள். கந்தன் பிறப்பதற்கு முன்பே, தேவர்களின் படைத்தலைவன் என்ற பதவி அவருக்குக் காத்திருந்தது. பதவியை அலங்கரிக்கப் பிறந்தவன் கந்தன். அவன் உருவாகக் காரணமான மன்மதனின் முயற்சி தொடங்கி சூரபதுமனை வென்று தெய்வயானையை மணந்தது வரை தேவர்களுக்கான நிகழ்வுகள். கந்தனுக்கு மனிதகுலச் சம்பந்தமும் வேண்டும் போலும் வள்ளியை துரத்தி மணந்து கொண்டார்.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் வரிசையாக இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. எளிமையாக அனைவருக்கும் புரிந்து கொள்ளும் வண்ணம் இந்த நூலில் எழுதப்பட்டுள்ளது. சூரபதுமனின் தங்கை அஜமுகியின் ஆர்ப்பாட்டம், ராவணனின் தங்கை சூர்ப்பனகையை நினைவுபடுத்துகிறது.
ஸ்ரீ விஷ்ணு புராணம் என்ற தலைப்புக்கேற்ப, விஷ்ணுவின் வரலாறு போல பிரபஞ்சப் படைப்பு முதல் வைகுண்டம் ஏகினார் என்பதுவரை சுருக்கமாக விஷ்ணு புராண நிகழ்வுகள் விளக்கப்பட்டுள்ளன. துருவன், பிரகலாதன் கதைகள் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. ஸ்ரீகிருஷ்ணர், ருக்மணியைத் திருமணம் செய்து கொள்ள தூக்கிச் சென்றார் என்பதும், அதற்காக சிசுபாலன், ருக்மி ஆகியோருடன் போரிட்டபொழுது பரசுராமர் கிருஷ்ணனுக்கு உதவினார் என்பதும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. எளிய தமிழில் சிறுவர்களும் படித்து புரிந்து கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளது இப்புத்தகம்.
புத்தகங்கள்: ஸ்ரீ கந்த புராணம், ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஆசிரியர்: தமிழ்க்கூத்தன்
வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.45/- (ஒவ்வொன்றும்)
தொடர்பு: 26507131. கைபேசி: 9444047790