துலாம் ராசி வாசகர்களே
சூரியன், புதன், குரு, சுக்கிரன், ராகு ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். தொலைதூர பயணம் நலம் தரும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். வேலை இல்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கூடி வரும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். தனவந்தர்கள் உதவுவார்கள். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத் திறமை வெளிப்படும்.
பணப் புழக்கம் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். தந்தையாலும் பிள்ளைகளாலும் அனுகூலம் உண்டாகும். மருத்துவம், ரசாயனம், விஞ்ஞானம், ஆன்மீகம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். திரவப் பொருட்கள் லாபம் தரும். வாரப் பின்பகுதியில் புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 18 (முற்பகல்), 22.
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெண்மை, பொன் நிறம், கருப்பு.
எண்கள்: 1, 3, 4, 5, 6.
பரிகாரம்: கணபதி ஜப, ஹோமம் செய்வது நல்லது.
விருச்சிக ராசி வாசகர்களே
சுக்கிரன், ராகு ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். வாரப் பின்பகுதியில் சந்திரனும் நலம் புரிவார். செவ்வாய் ஜன்ம ராசியில் தன் சொந்த வீட்டில் இருப்பதால் ஓரளவு நலம் உண்டாகும். மதிப்புக்கும் அந்தஸ்துக்கும் குறைவிராது. இயந்திரப் பணிகள் அளவோடு லாபம் தரும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். புதிய வாகனம் வாங்க சிலருக்கு வாய்ப்பு உண்டாகும். பயணம் சார்ந்த தொழில் லாபம் தரும்.
அயல் நாட்டுத் தொடர்பு பயன் தரும். ஜன்ம ராசியில் சனி இருப்பதால் அதிகம் உழைக்க வேண்டி வரும். உடல் நலனில் கவனம் தேவை. வாரப் பின்பகுதியில் நற்காரியங்களில் பங்கு கொள்வீர்கள். பிள்ளைகளால் ஒரு எண்ணம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள், இயந்திரப் பணியாளார்கள் ஆகியோர் விழிப்புடன் செயல்படுவது நல்லது. தாய் நலனுக்காக செலவு செய்ய வேண்டி வரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 18 (முற்பகல்), 22, 23.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: புகை நிறம், கருஞ்சிவப்பு, இளநீலம்.
எண்கள்: 4, 6, 9.
பரிகாரம்: குரு, சனி, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
தனுசு ராசி வாசகர்களே
புதன், குரு, சுக்கிரன், கேதுவின் நிலை அனுகூலமாக இருப்பதால் வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடி வரும். புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். சொத்துகள் சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். மாணவர்களது நிலை உயரும். மருத்துவர்கள் புகழ் பெறுவார்கள். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம். எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்களுக்கு வரவேற்பு கூடும்.
வாரப் பின்பகுதியில் தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பெரியவர்களும் தனவந்தர்களும் ஆதரவாக இருப்பார்கள். தொலைதூரப் பயணம் நலம் தரும். தான தர்மப் பணிகளில் ஈடுபாடு கூடும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்பு உருவாகும். கலைஞர்களது நிலை உயரும். இயந்திரப் பணியாளர்கள், இஞ்ஜீனியர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. கனவுத் தொல்லை தரும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 22, 23.
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, வடக்கு, வடமேற்கு.
நிறங்கள்: பச்சை, இளநீலம், பொன்நிறம், மெரூன்.
எண்கள்: 3, 5, 6, 7.
பரிகாரம்: செவ்வாய், சனிக்கு ப்ரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்ளவும்.
மகர ராசி வாசகர்களே
சூரியன், செவ்வாய், சுக்கிரன் சனி ஆகியோர் நலம் புரியும் நிலையில் இருப்பதால் முக்கியமான பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும். அரசியல்வாதிகளின் நோக்கம் நிறைவேறும். அரசுப் பணியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். இயந்திரங்கள் லாபம் தரும். நிலபுலங்களின் சேர்க்கையோ அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். விவசாயிகளுக்கு வருவாய் கூடும். இரும்பு, எஃகு, எண்ணெய், கருப்புநிற தானியங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
கலைஞர்கள் அளவோடு வளர்ச்சி காண்பார்கள். மாணவர்கள் படிப்பில் முழுகவனம் செலுத்துவது அவசியம். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள் முன்னேற்றம் தடைப்படும். பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. பயணத்தின்போது விழிப்புத் தேவை. தொழிலதிபர்கள் அகலக் கால் வைக்கலாகாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 18 (முற்பகல்), 23.
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, கிழக்கு.
நிறங்கள்: நீலம், சிவப்பு, ஆரஞ்சு.
எண்கள்: 1, 6, 8, 9.
பரிகாரம்: குடும்ப பெரியவர்கள், வேத விற்பன்னர்களை வணங்கி அவர்களது வாழ்த்துக்களைப் பெறுவது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே
செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகியோர் சாதகமாக உலவுகிறார்கள். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். பிள்ளைகளாலும் உடன்பிறந்தவர்களாலும், வாழ்க்கைத் துணைவராலும் அனுகூலம் உண்டாகும். எதிரிகள் அஞ்சி நடுங்குவார்கள். கூட்டுத் தொழில் லாபம் தரும். திரவப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிகழும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
இயந்திரப் பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். கலைஞர்களது நிலை உயரும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு வரவேற்பு கூடும். புதிய பொருட்களும் சொத்துகளும் சேரும். செய்துவரும் தொழிலில் வளர்ச்சி காண சந்தர்ப்பம் கூடி வரும். வியாபாரிகள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், தரகர்கள் வளர்ச்சி காண்பார்கள். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். அதில் வெற்றியும் கிடைக்கும். புதியவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 18 (முற்பகல்), 22.
திசைகள்: வடகிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: நீலம், பொன் நிறம், பச்சை, சிவப்பு.
எண்கள்: 3, 5, 6, 8, 9.
பரிகாரம் : நாகருடன் கூடிய சிவலிங்கத்தையும், சக்தியையும் வழிபடுவது நல்லது.
மீன ராசி வாசகர்களே
சுக்கிரனும், ராகுவும் அனுகூலமாக உலவுகிறார்கள். செவ்வாய் 9–ல் இருந்தாலும் ஓரளவு நலம் புரிவார். நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள். பிள்ளைகளால் அளவோடு நலம் உண்டாகும். பயணத்தின் மூலம் முக்கியமானதொரு காரியம் நிறைவேறும். புதியவர்களது சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.
உடன்பிறந்தவர்களாலும் வாழ்க்கைத் துணைவராலும் ஓரிரு நன்மைகள் உண்டாகும். உஷ்ணாதிக்கத்தால் உடல் நலம் பாதிக்கப் பட நேரலாம். கவனம் தேவை. தந்தை நலனில் அக்கறை செலுத்த வேண்டி வரும். சொந்தத் தொழிலில் அதிக கவனம் தேவை. போக்குவரத்து இனங்கள், தோல் பொருட்கள், எலக்ட்ரானிக் இனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். ஆராய்ச்சியாளர்கள் மதிப்பு உயரப் பெறுவார்கள். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் நலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட தேதிகள்: மார்ச் 18 (முற்பகல்), 22, 23.
திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு, தெற்கு.
நிறங்கள்: புகை நிறம், சிவப்பு, இளநீலம்.
எண்கள்: 4, 6, 9.
பரிகாரம்: குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் முல்லை மலர் மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.