மேஷ ராசி வாசகர்களே
சூரியன், புதன், குரு, கேதுவின் சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் புனிதமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொலைதூரப் பயணத்தால் அனுகூலம் உண்டாகும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். அரசாங்கத்தாரால் நலம் ஏற்படும். முக்கியஸ்தர்கள் உதவ முன் வருவார்கள். வியாபாரம் வளர்ச்சி பெறும். தகவல் தொடர்பு துறை தொழிலால் லாபம் கிடைக்கும். பிள்ளைகளாலும் தந்தையாலும் அனுகூலம் உண்டாகும்.
பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கூடும். 8–ம் தேதி முதல் சுக்கிரன் 11–ம் இடம் மாறுவதால், ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்களால் ஆதாயம் கிடைக்கும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். கணவன்-மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். மருத்துவர்களது நிலை உயரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 6, 7.
திசைகள்: வடகிழக்கு, கிழக்கு, வடக்கு, வடமேற்கு.
நிறங்கள்: மெரூன், ஆரஞ்சு, பொன் நிறம், பச்சை.
எண்கள்: 1,3, 5, 7.
பரிகாரம்: முருகன், ஆஞ்சநேயரை வழிபடவும்.
ரிஷப ராசி வாசகர்களே
9, 10–ம் இடங்களில் உள்ள கிரகங்கள் நலம் புரிவார்கள். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். கலைஞர்களது நோக்கம் நிறைவேறும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். பெண்களுக்கு மன உற்சாகம் கூடும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். நிறுவன, நிர்வாக துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். வாரப் பின்பகுதியில் முக்கிய பதவிகளும், பொறுப்புகளும் கிடைக்கும்.
பல வழிகளில் வருவாய் பெறுவீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்தி காணச் சந்தர்ப்பம் கூடி வரும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் தொழிலில் லாபம் கிடைக்கும். செய் தொழிலில் வளர்ச்சி காண்பதற்கான திட்டங்கள் நிறைவேறும். தான, தருமப் பணிகளில் நாட்டம் அதிகமாகும். கணவன்-மனைவி இடையே சிறு சிறு சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்களால் நல்லதும் அல்லாததும் கலந்த பலன்கள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 6, 7.
திசைகள்: வடமேற்கு, வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், இளநீலம், பச்சை.
எண்கள்: 1, 5, 6, 7.
பரிகாரம்: நாக தேவதை, துர்க்கையை வழிபடவும்.
மிதுன ராசி வாசகர்களே
செவ்வாய், சுக்கிரன், சனி, ராகு ஆகியோர் அனுகூலமாக உலவுவதால் வாழ்க்கைத் துணைவரால் நலம் பெறுவீர்கள். கூட்டு தொழில் லாபம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தொலைதூரப் பயணம் பயன் தரும். புதியவர்களது நட்பு கிடைக்கும். இயந்திரப் பணியாளர்கள், இஞ்சினீயர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவி வரும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் வெற்றி கிடைக்கும். நிலபுலங்கள் லாபம் தரும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும்.
பெண்களுக்கு உற்சாகமான போக்கு தென்படும். புதிய ஆடை அணிமணிகளின் சேர்க்கை நிகழும். வாரப் பின்பகுதியில் தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டி வரும். வியாபாரிகள், மாணவர்கள், உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு சிறு சிறு இடர்பாடுகள் ஏற்படும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருக்கவும். தொழிலதிபர்கள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 3, 4, 7 (பிற்பகல்).
திசைகள்: தென்மேற்கு, மேற்கு, தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: நீலம், கறுப்பு, சிவப்பு.
எண்கள்: 4, 6, 8, 9.
பரிகாரம்: குரு, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்யவும்.
கடக ராசி வாசகர்களே
புதன், குருவின் நிலை சிறப்பாக இருப்பதால் உங்கள் செல்வாக்கும் மதிப்பும் உயரும். பணவரவு திருப்தி தரும். எதிரிகள் அடங்குவார்கள். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடி வரும். வியாபாரிகள், தொழிலதிபர்களுக்கு வளர்ச்சி தெரிய வரும். வாரப் பின்பகுதியில் சூரியன், சந்திரன், கேது ஆகியோர் 8–ல் ஒன்று கூடுவதால் மன அமைதி குறையும்.
உடல் நலனில் அக்கறை தேவைப்படும். பெற்றோரால் சங்கடம் ஏற்படும். அரசுப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. கண், மறைமுக உறுப்பு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். குரு 8–ம் இடத்தைப் பார்ப்பதால் மோசமான நிலை ஏதும் ஏற்படாமல் காக்கப் படுவீர்கள். 8-ம் தேதி முதல் சுக்கிரன் 8–ம் இடம் மாறுவதால் கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 6, 7(முற்பகல்).
திசை: வடகிழக்கு, வடக்கு.
நிறங்கள்: பொன் நிறம், பச்சை.
எண்: 3, 5, 9.
பரிகாரம்: சூரியன், ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யவும். ஆதித்தயஹ்ருதயம் படிப்பதும் கேட்பதும் நல்லது.
சிம்ம ராசி வாசகர்களே
கோச்சாரப்படி கிரகநிலை சிறப்பாக இல்லை. ஜன்ம ராசியில் குரு உலவினாலும் அவரது பார்வை 5, 7, 9–ம் இடங்களுக்குப் பதிவதால் பிள்ளைகளாலும் வாழ்க்கைத் துணைவராலும், தந்தையாலும் சிறு சிறு நன்மைகள் அவ்வப்போது ஏற்படும். கலைஞர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. பெண்களுக்குச் சங்கடங்கள் அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளால் பிரச்சினைகள் ஏற்படும்.
எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் தொழிலைச் சேர்ந்தவர்கள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள். வீண் அலைச்சல் கூடவே செய்யும். உடல் சோர்வு ஏற்படும். பிறரிடம் கோபப்படாமல் சுமுகமாகப் பழகி வருவதன் மூலம் நலம் பெறலாம். பயணத்தின்போது எச்சரிக்கை தேவை. நிலபுலங்களால் அளவோடு ஆதாயம் கிடைக்கும். கேளிக்கைத் தவிர்ப்பது நல்லது. ஆடவர்களுக்குப் பெண்களால் பிரச்சினைகள் சூழும். தொழில் சம்பந்தமான வழக்குகளைச் சிலர் சந்திக்க நேரலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 6, 7.
திசை: தெற்கு | நிறம்: சிவப்பு | எண்: 9.
பரிகாரம்:நவகிரகங்களை வழிபடுவது நல்லது.
கன்னி ராசி வாசகர்களே
சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி, கேதுவின் நிலை சிறப்பாக இருப்பதால் நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகள் சேரும். சொத்துகளால் ஆதாயமும் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் உதவிக் கரம் நீட்டுவார்கள். பெற்றோரால் அனுகூலம் உண்டாகும்.
எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்கில் வெற்றி கிட்டும். விளையாட்டுகளில் ஈடுபாடு கூடும். அரசு பணிகள் ஆக்கம் தரும். அரசியல்வாதிகள், பொதுநலப் பணியாளர்களுக்கு மதிப்பு உயரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். தந்தையால் அனுகூலம் உண்டாகும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உண்டாகும். இயந்திரங்கள் லாபம் தரும். இரும்பு, எஃகு, எண்ணெய் தொழில்களில் ஆதாயம் கிடைக்கும். வாரப் பின்பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். சிக்கனம் தேவை. பயணத்தின் போது விழிப்புடன் இருக்கவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 6, 7.
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, வட மேற்கு.
நிறங்கள்: நீலம், பச்சை, மெரூன்.
எண்கள்: 1, 5, 6, 7, 8, 9.
பரிகாரம்: குரு, ராகுவுக்கு அர்ச்சனை ஆராதனைகளைச் செய்து வருவது நல்லது.