ஆன்மிகம்

வார ராசி பலன் 31-3-2016 முதல் 6-4-2016 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

சந்திரசேகர பாரதி

மேஷ ராசி வாசகர்களே!

குரு, சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக உள்ளது. இரண்டாம் தேதி முதல் சுக்கிரன் 12-ம் இடத்திற்கு மாறுவதும் சிறப்பாகும். வார முன்பகுதியில் சந்திரனும் சாதகமாக உலவுகிறார். புனிதமான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கப் பெறுவீர்கள். பண நடமாட்டம் திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். பெண்களால் ஆடவர்களுக்கு அனுகூலம் உண்டாகும்.

திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வாரக்கடைசியில் எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். பெற்றோர் நலனில் கவனம் தேவைப்படும். மக்களால் சிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். அரசுப்பணியாளர்கள், அரசியல்வாதிகள் பொறுப்புடன் காரியமாற்றுவது நல்லது.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 3, 4.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு , வடமேற்கு.

‎நிறங்கள்: மெரூன், இளநீலம், பொன் நிறம்.

எண்கள்: 2. 3, 6, 7. ‎

பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் படிப்பதும் கேட்பதும் நல்லது.

ரிஷப ராசி வாசகர்களே!

சூரியன், கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதாலும், 2-ம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் லாபஸ்தானம் மாறி வலுப்பெறுவதாலும் வாரப்பின்பகுதியில் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். முக்கியஸ்தர்களின் சந்திப்பு பயன்படும். ஆன்மிகப்பணிகளில் நாட்டம் கூடும். பிதுரார்ஜிதச் சொத்துக்கள் கிடைக்கும். புதிய பதவிகள், பாராட்டுகள், பட்டங்கள் கிடைக்கும்.

அலைச்சல் வீண்போகாது. சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதத்துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது. வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தினால் நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 3, 4, 6.

திசைகள்: வடமேற்கு, கிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், இளநீலம்.

எண்கள்: 1, 6, 7.

பரிகாரம்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

மிதுன ராசி வாசகர்களே!

உங்கள் ராசிநாதன் புதன், லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பது விசேடமாகும். சூரியன், செவ்வாய், சுக்கிரன், சனி, ராகு ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் நண்பர்கள், உறவினர்கள், தொழில் கூட்டாளிகள் ஆகியோரால் நலம்பெற வாய்ப்பு உண்டாகும். எதிரிகள் விலகிப் போவார்கள். வழக்கில் அனுகூலமான தீர்ப்பு கிடைக்கும். பயணத்தால் நலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும்.

அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைக்கும். வியாபாரிகள் அதிக லாபம் பெறுவார்கள். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். மாணவர்களது நிலை உயரும். உடன்பிறந்தவர்களாலும், தந்தையாலும் நலம் உண்டாகும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். 3-ல் குரு உலவுவதால், பொருளாதாரம் சம்பந்தமான இனங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. ஆசிரியர்கள், உத்தியோகஸ்தர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோருக்கெல்லாம் இடர்ப்பாடுகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிக்கவும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 4, 6.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: நீலம், புகைநிறம், சிவப்பு.

எண்கள்: 1, 4, 5, 6. 8, 9.

பரிகாரம்: குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் நெய் விளக்கேற்றி, அர்ச்சனை செய்வது நல்லது.

கடக ராசி வாசகர்களே!

புதன், குரு, சுக்கிரன் ஆகியோர் அனுகூலமாக உலவுவதால் எதிரிகள் விலகிப் போவார்கள். காரியத்தில் வெற்றி கிடைக்கும். பணவரவு அதிகமாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். கொடுக்கல் வாங்கல் பயன்படும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகைத் துறையினர் வளர்ச்சி காண்பார்கள். ஆசிரியர்களது நிலை உயரும். மாணவர்களது நோக்கம் நிறைவேறும். இரண்டாம் தேதி முதல் கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும்.

வாரப் பின்பகுதியில் தந்தையால் நலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். குருவோடு ராகு இருப்பதாலும், 5-ல் சனி உலவுவதாலும் மக்களால் மனத்தில் ஏதேனும் சலனம் ஏற்படும். அவர்கள் நடத்தையில் கவனம் தேவை. விஷபயம் உண்டாகும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியமாகும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 3 (பகல்), 6.

திசைகள்: வடகிழக்கு, . தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: பொன் நிறம், இளநீலம், பச்சை.

எண்: 3, 5, 6, 9.

பரிகாரம்: கணபதி ஜபம், ஹோமம் செய்வது நல்லது.

சிம்ம ராசி வாசகர்களே!

உங்கள் ஜன்ம ராசியில் குரு இருந்தாலும் அவரது பார்வை 5, 7, 9-ம் இடங்களில் பதிவதால் நலம் புரிவார். செவ்வாய் நான்கில் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் உலவுவதால் அனுகூலம் ஏற்படும். 2-ம் தேதி முதல் சுக்கிரன் 8-ம் இடத்திற்கு மாறி, வலுப்பெறுவது குறிப்பிடத்தக்கது. மக்கள் நலம் சீராக இருந்துவரும். வாழ்க்கைத்துணைவராலும், தந்தையாலும் அளவோடு அனுகூலம் உண்டாகும்.

நிலபுலங்கள் ஓரளவுக்கு லாபம் தரும். இடமாற்றம், நிலைமாற்றம் சிலருக்கு ஏற்படும். ராசிநாதன் சூரியன் 8-ல் இருப்பதாலும், 4-ல் சனி உலவுவதாலும் உடல்நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். மார்பு, இதயம், தலை சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். பெற்றோர் நலனில் கவனம் தேவைப்படும். அரசுப்பணிகளில் விழிப்புத் தேவை. கலைத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை உதயமாகும். மாதர்களது எண்ணம் நிறைவேறும்.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 3, 4.

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, இளநீலம், வெண்மை.

எண்கள்: 6, 9.

பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

கன்னி ராசி வாசகர்களே!

செவ்வாய், புதன், சனி, கேது ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றி கிட்டும். விளையாட்டு விநோதங்களில் ஈடுபாடு கூடும். உழைப்பு வீண்போகாது. திறமை பளிச்சிடும். ஆன்மிகப்பணிகளில் நாட்டம் கூடும். சூரியன், குரு, சுக்கிரன், ராகு ஆகியோரது நிலை சிறப்பாக இல்லாததால் கணவன் மனைவி உறவு நிலை பாதிக்கும். சகிப்புத்தன்மை தேவை.

கூட்டுத்தொழிலில் விரிசல் ஏற்படும். பயணத்தால் சங்கடம் உண்டாகும். பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது. வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு, கமிஷன் துறைகளில் வருவாய் கிடைக்கும். நிலபுலங்கள் ஓரளவுக்கு லாபம் தரும். இயந்திரப்பணிகளால் ஆதாயம் பெறுவீர்கள். 2-ம் தேதி முதல் கலைஞர்கள், மாதர்களுக்கு சங்கடங்கள் அதிகரிக்கும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.

அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 3, 4, 6.

திசைகள்: தெற்கு, மேற்கு, வடக்கு, வட மேற்கு.

நிறங்கள்: சிவப்பு, கருநீலம், மெரூன், பச்சை.

எண்கள்: 5, 7, 8, 9.

பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரையும் ரங்கநாயகியையும் வழிபடுவது நல்லது. ஏழைப் பெண்களுக்கு நல்லுதவி செய்யவும். வேதம் பயில்பவர்களுக்கு உதவுவது நல்லது.

SCROLL FOR NEXT