புத்தரிடம் சீடர் வந்தார். குருவே எழுபது கேள்விகள் கேட்டுவிட்டேன், உங்களிடம் பதிலில்லை என்று முறையிட்டார். புத்தரின் வழக்கமான புன்னகை. வாழ்வின் பொருளென்ன என்ற வழக்கமான கேள்விதான். எத்தனை முறை கேட்பது? புத்தரின் அதே புன்னகை. திரும்பவும் திரும்பவும் கேள்விகள் கேட்கப்பட்டன. பிரம்மாண்டமான மரத்தடியில் உட்கார்ந்து புன்சிரிப்புடன் இருந்தார் புத்தர். நூறு தடவைகள் ஒரே கேள்வியைக் கேட்ட சலிப்போடு சீடர் திரும்பி நடந்தார். மரத்திலிருந்து உதிர்ந்த ஏராளமான சருகுகளில கால் பதித்து சீடர் நடக்கும்போது சரக் சரக்கென ஒலி எழுப்பின. புத்தர் சிரித்தார்.
“ என் சீடனே உனக்கான பதில் உன் காலடியில்.”