ஆன்மிகம்

வடிவுடைநாயகிக்கு வளைகாப்பு;  வீட்டிலிருந்தபடி நேரலையில் தரிசனம்! 

செய்திப்பிரிவு

சென்னை திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் முக்கிய நிகழ்ச்சிகள் ஆன்லைன்' மூலம் பக்தர்களுக்கு அவ்வப்போது நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக 10.08.2021 செவ்வாய்க் கிழமை ஆடிப்பூரம் வளைகாப்பு நிகழ்ச்சியினை நேரடியாக ஒளிபரப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் "ஆடிப்பூரம்" என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில் தான் உமாதேவி தோன்றியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளைகாப்பு திருவிழா நடைபெறுகிறது.

பெண்களுக்கே உரித்தான ஒரு தனிச் சிறப்பு... தாய்மை. பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவதுபோல, நம்மைப் படைத்த அன்னைக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்திடும் நாளே ஆடிப் பூரம்.

பக்தர்கள் https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற YouTube channel மூலம், 10.08.2021 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5 மணிக்கு வளைகாப்பு விழா நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த நேரலையை பக்தர்கள் தரிசித்து அருள்மிகு தியாகராஜ சுவாமி உடனுறை திரிபுர சுந்தரி அம்மனின் அருளைப் பெறுவோம்.

மேற்படி YouTube channel-னை subscribe and share செய்யவும், இந்தத் தகவலினை தங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு அனைவரும் வளைகாப்பு உற்ஸவத்தினை நேரலையில் கண்டு இறைவன் அருள் பெறுங்கள் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT