ஆன்மிகம்

மயிலை ஸ்ரீவேதாந்த தேசிகர் தேவஸ்தானம்கோடை உற்சவம்

செய்திப்பிரிவு

மயிலை  வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் உள்ள  நிவாசப் பெருமாள் கோவிலில் கோடை உற்சவம் வரும் 29-ந் தேதியில் தொடங்கி ஜூலை 5-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. காலையில் திருமஞ்சனத்தையடுத்து, மாலை வேளைகளில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளும், பக்தர்களால் பேசும் பெருமாள் என்று அழைக்கப்படும் இப்பெருமாளுக்கு, குங்குமப் பூவை அரைத்து விழுதாக்கி, திருமேனி முழுவதும் காப்பாகப் பூசப்படும்.

பூ மணத்தில் முல்லை, மல்லிகை, ரோஜா என்ற பலவித வாசனைகளை நுகர்ந்திருப்போம், ஆனால் இவ்விழாவின்போது குங்குமப் பூவை தினமும் அரைத்துப் பெருமாளுக்குப் பூசப்படும், அந்த நேரத்தில் மண்டபம் முழுவதும் சூழ்ந்திருக்கும் குங்குமப்பூ வாசனையினையும் காப்பிட்டுக்கொண்டுள்ள பெருமாள் தரிசனத்தையும் ஒரு சேர பக்தர்கள் அநுபவிக்கலாம்.

பெருமாளின் திருமேனி முழுவதும் அரைத்த குங்குமப் பூவைத் தொடர்ந்து அரைத்த சந்தனம் பூசப்படும். மல்லிகைப்பூ மாலைகள் சாற்றப்படும். இவ்விழா நாட்களில் பெருமாளைக் குளிர்விக்கப் பூக்களால் நெய்த போர்வை போற்றப்படும். தினமும் மாடவீதிப் புறப்பாடும் உண்டு.

SCROLL FOR NEXT