ஆன்மிகம்

வார ராசி பலன் 18-2-2016 முதல் 24-2-2016 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

சந்திரசேகர பாரதி

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும், 10-ல் புதனும், 11-ல் சூரியனும் கேதுவும் உலவுவது சிறப்பு. வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். தாய் நலம் சீராகும். பிள்ளைகளால் ஓரிரு எண்னங்கள் நிறைவேறும். பண வரவு திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியம் நிறைவேறும்.

வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். புதிய பொருட்கள் சேரும். 7-ல் செவ்வாயும், 10-ல் சுக்கிரனும் இருப்பதால் கணவன் மனைவி இடையே சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும். சனி 8-ல் இருப்பதால் அதிகம் உழைக்க வேண்டிவரும். செய்து வரும் தொழிலில் முழுக்கவனம் செலுத்துவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 19, 22, 24.

திசைகள்: வடமேற்கு, கிழக்கு, வடக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: மெரூன், ஆரஞ்சு, பொன் நிறம், பச்சை.

எண்கள்: 1, 3, 5, 7. ‎

பரிகாரம்: அஷ்டமச் சனிக்கு அர்ச்சனை செய்வது நல்லது. நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுவது சிறப்பு.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாயும் 9-ல் சுக்கிரனும், 10-ல் சூரியனும் கேதுவும் உலவுவது நல்லது. குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பேச்சில் திறமை கூடும். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ பெறுவீர்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும்.

ஆன்மிகப்பணிகளில் ஆர்வம் கூடும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். இயந்திரப்பணிகளால் லாபம் கிடைக்கும். கலைத்துறையினருக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். புனிதப்பணிகளில் ஈடுபாடு கூடும். அலைச்சல் வீண்போகாது. நல்லவர்களின் தொடர்பு நலம் கூட்டும். கெட்டவர்களின் தொடர்புக்கு இடம் தரலாகாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 19, 22, 24.

திசைகள்: வடமேற்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு. தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, வெண்மை, பச்சை.

எண்கள்: 1, 5, 6, 7, 9.

பரிகாரம்: துர்கைக்கு நெய் விளக்கேற்றி வழிபடுவது நல்லது.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 6-ல் சனியும், 8-ல் புதனும் சுக்கிரனும் உலவுவது விசேஷம். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உடல் நலம் சீராகும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். நல்லவர்கள் நலம் புரிவார்கள். முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். புதியவர்களது நட்பு கிடைக்கும்.

ஏற்றுமதி-இறக்குமதி தொழில் லாபம் தரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். மாணவர்களது நிலை உயரும். பிள்ளைகளாலும் தந்தையாலும் சில இடர்பாடுகள் ஏற்படும். பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. உத்தியோகஸ்தர்களுக்குப் பிரச்சினைகள் சூழும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. ஆசிரியர்களும், பேராசிரியர்களும் பொறுப்புடன் செயல்படுவது அவசியம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 19, 22, 24.

திசைகள்: தென்மேற்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: நீலம், கறுப்பு, பச்சை, வெண்மை.

எண்கள்: 4, 5, 6, 8.

பரிகாரம்: குருப் பிரீதி செய்து கொள்வது நல்லது.

கடக ராசி வாசகர்களே

கோசாரப்படி குரு ஒருவரே அனுகூலமாக உலவுகிறார். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக, இல்லாததால் சில இடர்பாடுகள், குறுக்கீடுகள், தடைகள் ஏற்படவே செய்யும். செலவுகள் அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும். கணவன் மனைவி இடையே சலசலப்புக்கள் ஏற்படும். தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரு6ம். அலைச்சல் அதிகரிக்கும். உஷ்ணாதிக்கம் கூடும்.

பிள்ளைகளின் நடத்தையில் கவனம் தேவை. கண், இதயம் சம்பதமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். வாரப் பின்பகுதியில் பண வரவு சற்று அதிகரிக்கும். குடும்பத்தில் பிரச்சினைகள் குறையும். நல்லவர்களின் தொடர்பு நலம் சேர்க்கும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள். அரசியல், நிர்வாகம், வியாபாரம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண அரும்பாடுபட வேண்டிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 22, 24.

திசை: வடகிழக்கு.

நிறங்கள்: பொன் நிறம், தாமரை நிறம்.

எண்: 3.

பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிப்பது நல்லது.

சிம்ம ராசி வாசகர்களே

செவ்வாய் 3—லும், புதன் 6-லும் உலவுவது நல்லது. துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களால் நலம் உண்டாகும். போட்டி, பந்தயங்கள், விளையாட்டுகளில் வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் குறையும். இயந்திரங்கள், எரிபொருட்கள், மின் சாதனங்கள், செந்நிறப்பொருட்கள், நிலபுலங்கள் ஆகியவை லாபம் தரும். வியாபாரிகளுக்கு ஆதாயம் அதிகமாகும்.

எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு வரவேற்பு கூடும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். சிக்கன நடவடிக்கை தேவை. வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. கலைஞர்கள், பெண்களுக்குப் பிரச்சினைகள் சூழும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். ஆண்களுக்குப் பெண்களால் சங்கடம் ஏற்படும். கணவன் மனைவி இடையே வாக்குவாதங்கள் அதிகமாகும். சகிப்புத் தன்மை தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 19, 22, 24.

திசைகள்: தெற்கு, வடக்கு.

நிறங்கள்: சிவப்பு, பச்சை.

எண்கள்: 5, 9.

பரிகாரம்: துர்கை, விநாயகரை வழிபடவும்.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 5-ல் சுக்கிரனும், 6-ல் சூரியனும் கேதுவும் உலவுவதால் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். ஒன்றுக்கும் அதிகமாக வருவாய் வந்து சேரும். பிள்ளை நலம் திருப்தி தரும். பிள்ளை நலனுக்காகச் சுபச் செலவு செய்வீர்கள். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். பெண்களின் எண்ணம் ஈடேறும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும்.

பொதுப்பணியாளர்கள் புகழ் பெறுவார்கள். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு கூடும். அதனால் மனதில் தெளிவும் பிறக்கும். வாரப் பின்பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும். பயணத்தால் சிறு சங்கடம் ஏற்படும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லது. வீண் சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 19, 22.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு, வடமேற்கு.

நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை, மெரூன்.

எண்கள்: 1, 5, 6, 7, 8.

பரிகாரம்: ராகு, குருவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.

SCROLL FOR NEXT