ஆந்திர மாநிலத்தில் உள்ள அஹோபில மடத்தில் இந்தி பேசும் சிலர் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு ஒரே ரிதமாகப் பாடிக்கொண்டிருந்தார்கள். இந்த ரிதம் எங்கேயோ கேட்டாற்போல் இருக்கிறது என்று எண்ணியபடி அவர்கள் கையில் இருந்த புத்தகத்தை எட்டிப் பார்த்தபோது அதில் இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்தது.
ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் காதைக் கூர்மையாக்கி இந்த பழக்கப்பட்ட ரிதம் என்னவென்று அறிய முற்பட்டபோது, காதில் விழுந்தது, `பட்டபிரான் கோதை சொன்ன` என்ற வரி.
அட நம்ம ஆண்டாள் பாசுரம், இந்தி மொழி வடிவில். ஆனந்தம் தாங்கவில்லை. தமிழக ஆண்டாள் அங்கும், வடநாட்டு மீரா இங்கும் இன்றும் கோலோச்சிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை நினைக்கையில் சிலிர்ப்பு ஏற்படுகிறது.
பட விளக்கம்: ரங்கம் ரங்கநாதர் கோயிலில் பரமபத நடை சந்நிதி பகுதியில் ஆண்டாளின் ‘நாயகனாய் நின்ற’ என்ற 16-ம் பாசுரம் அலங்காரத்தின் மூலம் விளக்கப்பட்டுள்ளது.