ஆன்மிகம்

என்ன பயனுள்ளது?

செய்திப்பிரிவு

ஓர் ஞானமடைந்த ஆசிரியரின்றி, சீடனாக தீட்சை பெற்று என்ன பயன்?

நீ செல்லும் பாதை குறித்த உள்ளார்ந்த விழிப்புணர்வின்றி, புனித நூல்களை மனப்பாடமாகப் படித்து என்ன பிரயோஜனம்?

லௌகீகக் குறிக்கோள்கள் மற்றும் ஆசைகளை விடாமல், தியானம் செய்வதால் என்ன உபயோகம்?

உனது உடல், பேச்சு மற்றும் மனதைக் கட்டுப்படுத்தாமல் சடங்குகளில் ஈடுபடுவதால் என்ன நிகழப்போகிறது?

ஒரு இழிவை உன்னால் தாங்க முடியாவிடில் பொறுமையாகத் தியானம் செய்வதன் மூலம் கிடைக்கப் போவதுதான் என்ன?

பந்தம் மற்றும் வெறுப்புணர்வைத் தாண்ட முடியாத நிலையில், ஏழைகளுக்கு உதவி செய்து என்ன பயன் காணப்போகிறாய்?

எல்லாச் சுயநலங்களிலிருந்தும் விடுபடாமல் ஒரு பெரிய மடாலயத்துக்கு நீ எப்படித் தலைவனாக முடியும்?

உன் மனதிற்குள் சமய உணர்வு வளராமல், ஆலயங்களையும் மடங்களையும் கட்டி என்ன பயன்?

நீ எனது வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல், எனது மரணத்துக்காக அழுது புலம்புவதில் என்ன பயன் உள்ளது?

SCROLL FOR NEXT