மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும், 8-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பு. நூதனப் பொருட்களின் சேர்க்கை நிகழும். பிற மொழி, மத, இனக்காரர்களால் நலம் உண்டாகும். எதிரிகள் கட்டுக்குள் அடங்குவார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காண அதிகம் உழைக்க வேண்டிவரும். கணவன் மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு விலகும். சனி 8-ல் இருப்பதால் மனதில் ஏதேனும் சலனம் ஏற்படும். யாருக்கும் ஜாமீன் கொடுக்கலாகாது. அதிர்ஷ்டத்துக்கு ஆசைப்படாமல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. கால் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். தந்தையோடு சலசலப்புக்கள் உண்டாகும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.
பரிகாரம்: சனி 8-ல் இருப்பதால் சனிப் பிரீதி செய்வது அவசியம்.
எண்கள்: 1, 4, 6.
நிறங்கள்: வெண்மை, பொன்நிறம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 31, ஜனவரி 1, 3
திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் குருவும், 6-ல் செவ்வாயும், 8-ல் புதனும், 11-ல் கேதுவும் உலவுவதால் புதிய சொத்துகள் சேரும். சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும். பிள்ளைகள் நலம் சீராகும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் வெற்றி கிடைக்கும். இன்ஜினீயர்களது நிலை உயரும். உத்தியோகஸ்தர்களது எண்ணம் நிறைவேறும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். 7-ல் சனியும், சுக்கிரனும் இருப்பதால் கணவன் மனைவி இடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தந்தையாலும் அரசாங்கத்தாராலும் சில சங்கடங்கள் உண்டாகும். கெட்டவர்களின் தொடர்பு கூடாது. நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றம் காணக் குறுக்கீடுகள் முளைக்கும்.
பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்யவும். தந்தைக்கும், தந்தை வழி உறவினர்களுக்கும் உதவவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிச 31, ஜன. 1, 4, 6.
திசைகள்: வடமேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மெரூன், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 7, 9.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் சனியும், 10-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. நல்ல தகவல் வந்து சேரும். அலைச்சல் சற்று கூடுமென்றாலும் அதற்கான பயன் கிடைக்கும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். பொது நலப்பணிகளில் ஈடுபாடு கூடும். தொழிலாளர்கள், விவசாயிகள், அறநிலையப் பணியாளர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். 5-ல் செவ்வாயும், 6-ல் சுக்கிரனும் இருப்பதால் வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பிள்ளைகளால் மன அமைதி குறையும். கர்ப்பிணிப் பெண்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவி உறவு நிலை சீராக அமைய விட்டுக் கொடுத்துப் பழகுவது நல்லது. ஆசைகளைக் குறைத்துக் கொள்ளவும். நேர் வழியில் செல்வதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். வாகனங்களில் செல்லும்போது விழிப்புடன் இருக்கவும்.
திசைகள்: வடமேற்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், மெரூன்.
எண்கள்: 7, 8.
பரிகாரம்: துர்கை, மகாலட்சுமியை வழிபடுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள் டிசம்பர் 31, ஜன. 1, 4, 6.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியனும் புதனும் உலவுவதால் குடும்ப நலம் சீராக இருந்துவரும். பேச்சாற்றல் கூடும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். புதியவர்களது தொடர்பு நலம் தரும். நிலம், மனை, வீடு, வாகனங்களால் ஓரளவு அனுகூலம் உண்டாகும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். பெண்களின் எண்ணம் ஈடேறும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் தொழிலில் வருவாய் அதிகம் கிடைக்கும். நிறுவன, நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். பொருள் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. பிள்ளைகளால் சிறுசிறு இடர்ப்பாடுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள். மார்பு, அடிவயிறு சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும்.
பரிகாரம்: சிவ வழிபாடு நலம் தரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 31, ஜன.1, 4, 6.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: புகை நிறம், இளநீலம், பச்சை.
எண்கள்: 1,4,5,6
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 3-ல் செவ்வாயும், 4-ல் சுக்கிரனும் உலவுவதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். செல்வாக்கு கூடும். பொருளாதார நிலையில் அபிவிருத்தி காணலாம். வரவேண்டிய பணம் வசூலாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். குடும்பத்தில் பிரச்சினைகள் குறையும். மனதில் துணிவு கூடும். செயல் வேகம் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். கடன் குறையும். எதிரிகள் அடங்கு வார்கள். போட்டிகளிலும் பந்தயங்களிலும் வெற்றி கிட்டும். நண்பர்கள் அளவோடு உதவுவார்கள். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். உடன்பிறந்தவர்கள், பிள்ளைகள், வாழ்க்கைத்துணைவரால் நலம் ஏற்படும். 4-ல் சனி இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். அதனால் உடல் சோர்வு ஏற்படும். தொழில் முன்னேற்றத்துக்கு எடுத்த முயற்சிகள் நிறைவேறும்.
பரிகாரம்: சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. நரசிம்மரை வழிபடவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 1, 4, 6.
திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: வான்நீலம், வெண்மை, சிவப்பு.
எண்கள்: 1, 3, 5, 6, 9.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும், சனியும், 4-ல் புதனும் உலவுவது சிறப்பு. போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். பொது நலப்பணிகளில் ஆர்வம் அதிகமாகும். பெண்கள் வளர்ச்சி காண்பார்கள். உடன்பிறந்தவர்களால் நலம் உண்டாகும். தகவல் தொடர்பு தொழிலில் வருவாய் அதிகம் கிடைக்கும். தொழிலாளர்களது கோரிக்கைகள் நிறைவேறும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் தொழிலில் வருவாய் கிடைத்துவரும். அலைச்சலும் உழைப்பும் வீண்போகாது. 2-ல் செவ்வாய் இருப்பதால் வீண்சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். குடும்ப நலனில் கவனம் தேவை. வீடு மாற்றம், தொழில் மாற்றம் உண்டாகும். விளையாட்டின்போதும், பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மெற்கொள்வது நல்லது.
பரிகாரம்: செவ்வாய், குரு, ராகு, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகளைத் தொடர்ந்து செய்வது நலல்து.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 1, 4, 6.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை.
எண்கள்: 5, 6, 8.