திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவத்தையொட்டி தீர்த்தவாரி நடைபெற்றது.   
ஆன்மிகம்

சித்திரை வசந்த உற்சவத்தையொட்டி அண்ணாமலையார் கோயிலில் தீர்த்தவாரி: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு  

இரா.தினேஷ் குமார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவத்தையொட்டி இன்று தீர்த்தவாரி நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் கடந்த 16-ம் தேதி மாலை தொடங்கியது. கோயிலில் உள்ள சம்மந்த விநாயகர் சன்னதி முன்பு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதையடுத்து 10 நாள் உற்சவம் தொடங்கியது. சுவாமி மற்றும் அம்மன் உற்சவம் நடைபெற்றது.

சித்திரை வசந்த உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி திங்கள்கிழமை (இன்று) நடைபெற்றது. கரோனா கட்டுப்பாடுகளால், திருவண்ணாமலை அய்யங்குளத்தில் நடைபெற வேண்டிய தீர்த்தவாரி, கோயிலிலேயே நடைபெற்றது. பெரிய நந்தி அருகே, சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க தீர்த்தவாரி நடைபெற்றது.

முன்னதாக, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி மற்றும் அம்மன் உற்சவம், கோயிலின் உள் பிரகாரத்தில் நடைபெற்றது. தீர்த்தவாரியைத் தொடர்ந்து கோயிலில் உள்ள கொடி மரம் முன்பு மன்மத தகனம் நடைபெற்றது. கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளால், தீர்த்தவாரியில் சுவாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

SCROLL FOR NEXT