மேஷ ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 6-ல் செவ்வாயும் ராகுவும் உலவுவதால் மனமகிழ்ச்சி பெருகும். முக்கியமான காரியங்கள் நிறைவேறும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்துவரும். ஊகவணிகம் போன்ற அதிர்ஷ்ட இனங்கள் லாபம் தரும். எதிர்ப்பு அடங்கும். வழக்கில் வெற்றி கிட்டும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். போக்குவரத்து துறையில் வருவாய் கூடும்.
வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். தொழிலாளர்களும் விவசாயிகளும் அதிகம் உழைக்க வேண்டிவரும். கணவன் மனைவி இடையே சலசலப்புக்கள் உண்டாகும். பக்குவமாகப் பேசிப் பழகுவது நல்லது. கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. தொழில் பங்குதாரர்கள் விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 5, 6, 8, 9, 11.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தெற்கு.
நிறங்கள்: சிவப்பு, பொன்நிறம்.
எண்கள்: 3, 4, 9.
பரிகாரம்: மகாலட்சுமி அஷ்டகம் படிக்கவும். ஸ்ரீ சூக்த பாராயணம் செய்யவும்.
ரிஷப ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும், 6-ல் சூரியனும் புதனும் 11-ல் கேதுவும் உலவுவதால் புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். நண்பர்களும் உறவினர்களும் உதவி செய்வார்கள். தொழிலில் சீரான வளர்ச்சி காணலாம். கலைத்துறையினருக்கும் மாதர்களுக்கும் அளவோடு நலம் உண்டாகும். மக்களால் சில இடர்பாடுகள் ஏற்படும். கவனம் தேவை. அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும்.
அரசுப்பணியாளர்களது நோக்கம் நிறைவேறும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். எலெக்ட்ரானிக் துறையில் ஆதாயம் கிடைக்கும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு செழிப்புக் கூடும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு தேவை. உணவுப்பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. கெட்ட பழக்கவழக்கங்களைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 5, 6, 8, 9, 11.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், வெண்மை, இளநீலம், பச்சை.
எண்கள்: 1, 5, 6, 7.
பரிகாரம்: துர்க்கையையும் சுப்பிரமணியரையும் வழிபடவும்.
மிதுன ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும் 6-ல் சனியும், 10-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். நல்ல தகவல் வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். செவ்வாயும், ராகுவும், சுக்கிரனும் ஒன்று கூடி 4-ல் இருப்பதால் வாகனம் ஓட்டுவதில் விழிப்புத் தேவை. புதன், 5-ல் இருந்தாலும் ராசி அதிபதி என்பதால் நலம் புரிவார். மக்களால் நலம் உண்டாகும். சனி பலம் இருப்பதால் உழைப்பு வீண்போகாது. தொழிலாளர்களது நிலை உயரும்.
சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் நற்பெயர் பெறுவார்கள். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். பொருளாதார விஷயங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. பிறரால் ஏமாற்றப்பட நேரலாம். எச்சரிக்கை தேவை. நெருங்கிப் பழகியவர்களே உங்களுக்கு எதிரியாகக்கூடும். வெளிப்படையாகப் பழக வேண்டாம். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. செய்தொழலில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள் : நவம்பர் 5, 6, 8, 9, 11.
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, மேற்கு
நிறங்கள்: நீலம், பச்சை, மெரூன்.
எண்கள்: 5, 6, 7, 8.
பரிகாரம்: செவ்வாய், ராகு குரு ஆகியோருக்குப் பரிகாரம் செய்து கொள்ளவும்.
கடக ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 3-ல் செவ்வாயும் ராகுவும் சுக்கிரனும் 4-ல் புதனும் உலவுவது சிறப்பாகும். வார ஆரம்பத்தில் பொருள்வரவு கூடும். பேச்சில் இனிமையும் திறமையும் வெளிப்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். விருந்துகளில் ஈடுபாடு உண்டாகும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி வருவீர்கள். வார நடுப்பகுதியில் பயணத்தால் அனுகூலம் உண்டு. எதிர்ப்புகள் குறையும்.
உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். வாரப்பின்பகுதியில் நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். அலைச்சலும் அதனால் பயனும் உண்டு. வியாபாரிகளுக்கு லாபம் கூடும். மாணவர்களது திறமை பளிச்சிடும். பத்திரிகையாளர்களுக்கு வரவேற்பு கூடும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 5, 6, 8, 9, 11.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு.. , தெற்கு.
நிறங்கள்: புகை நிறம், இளநீலம், பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 3, 4, 5, 6, 9.
பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் படிப்பதும் கேட்பதும் நல்லது.
சிம்ம ராசி வாசகர்களே!
உங்கள் ராசிநாதன் சூரியன் 3-ல் உலவுவது சிறப்பாகும். சுக்கிரன் 2-ல் இருப்பதும் சிறப்பாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். சுயமுயற்சி முன்னேற்றம் தரும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். கலைத்துறையினருக்கு நன்மை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு அனுகூலமான போக்கு தென்படும்.
அரசுப்பணியாளர்களுக்கு வாய்ப்புக்கள் கூடிவரும். மக்கள் நலம் சீராகவே இருந்துவரும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். பேச்சிலும் செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. புதன் பலம் குறைந்திருப்பதால் வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் கவனம் தேவை. பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 5, 6, 8, 9, 11.
திசைகள்: தென்கிழக்கு..கிழக்கு.
நிறங்கள்: வான்நீலம், வெண்மை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 6.
பரிகாரம்: ருத்திரம் படிப்பதும் கேட்பதும் நல்லது. சூரிய நமஸ்காரம் செய்யவும். சர்ப்ப சாந்தி செய்து கொள்ளவும்.
கன்னி ராசி வாசகர்களே!
உங்கள் ராசியில், சுக்கிரனும் 2-ல் புதனும் 3-ல் சனியும், உலவுவது சிறப்பாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். சுயமுயற்சியால் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பநலம் சீராக இருந்துவரும். விருந்துகளில் ஈடுபாடு கூடும். வாழ்க்கை வசதிகள் பெருகும். சுபகாரியச் செலவுகள் கூடும்.
மக்கள் நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். ஜன்ம ராசியில் செவ்வாயும் ராகுவும் உலவுவதால் அலைச்சல் அதிகரிக்கும். எதிலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும், விளையாட்டுகளில் ஈடுபடும்போதும் கவனம் தேவை. வாரப்பின்பகுதியில் பண நடமாட்டம் அதிகமாகும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கும் எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறையினருக்கும் வருவாய் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 5, 6, 8, 9, 11.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை.
எண்கள்: 5, 6, 8.
பரிகாரம்: சூரியன், ராகு, கேது, குரு, செவ்வாய் ஆகியோருக்கு ஆராதனைகளைச் செய்வது நல்லது.