மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ல் உலவுவது சிறப்பு. குரு 5-ல் அமர்ந்து ராசியைப் பார்ப்பதும் விசேஷம். இதனால் உங்கள் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். உடல்நலம் சீராக இருக்கும். நல்லவர்களின் தொடர்பால் நலம் சேரும். எதிரிகள் அடங்குவர்கள். வழக்கில் வெற்றி கிடைக்கும். பயணத்தால் முக்கியமான காரியம் நிறைவேறும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் லாபம் தரும். 6-ல் சுக்கிரன், 7-ல் சூரியன் உலவுவதால் வாழ்க்கைத்துணைவரால் சங்கடம் ஏற்படும்.
பெண்களுக்கும் கலைஞர்களுக்கும் எதிர்ப்புகள் அதிகரிக்கும். 8-ல் சனி இருப்பதால் அதிகம் பாடுபட வேண்டிவரும். கெட்டவர்களின் தொடர்பு கூடாது. செய்து வரும் தொழிலில் அதிக அக்கறை தேவை. 17-ம் தேதி முதல் சூரியன் 8-ம் இடம் மாறி சனியுடன் கூடுவதால் தந்தையாலும் பிள்ளைகளாலும் மன அமைதி குறையும். வாரப் பின்பகுதியில் தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். நற்காரியங்களில் ஈடுபாடு கூடும். புதிய சொத்துகள் சேரும். சொத்துகளால் ஆதாயமும் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதி: நவம்பர் 15, 18 (பகல்).
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தெற்கு.
நிறங்கள்: சிவப்பு, பொன்நிறம்.
எண்கள்: 3, 4, 5, 9.
பரிகாரம்: சனிப் பிரீதி செய்வது அவசியம். சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும், 6-ல் சூரியனும், 11-ல் கேதுவும் உலவுவதால் அரசு விவகாரங்களில் அனுகூலமான திருப்பம் உண்டாகும். எதிர்ப்புகள் குறையும். கலைஞர்களுக்கு அளவோடு அனுகூலம் ஏற்படும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். நல்லவர்களின் தொடர்பு நலம் தரும். 5-ல் செவ்வாயும் ராகுவும் உலவுவதால் பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படும்.
வயிறு சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வரவேற்பு கூடும். உடன்பிறந்தவர்களால் அதிகம் அனுகூலமிராது. 17-ம் தேதி முதல் சூரியன் 7-ம் இடம் மாறி சனிபுதன் ஆகியோருடன் கூடுவது சிறப்பாகாது. பிறரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. வாரக் கடைசியில் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவி இடையே சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டு விலகும். வண்டி, வாகனங்களில் செல்லும்போது விழிப்புடன் இருப்பது நல்லது. கூட்டாகத் தொழில் புரிபவர்கள் ஓரளவு லாபம் பெறுவார்கள். வேலைக்குச் செல்லும் பெண்களும், கர்ப்பிணிப் பெண்களும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதி: நவம்பர் 13, 18.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், வெண்மை, இளநீலம்.
எண்கள்: 1, 6, 7.
பரிகாரம்: துர்கை, சுப்பிரமணியரை வழிபடுவது நல்லது.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும், 6-ல் புதனும் சனியும், 10-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்துவரும். பண வரவு கூடும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். நண்பர்கள் அளவோடு உதவுவார்கள். தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு அனுகூலமான போக்கு நிலவிவரும். கலைத்துறையினருக்கு ஓரளவு நலம் உண்டாகும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். செய்து வரும் தொழிலில் அதிக கவனம் செலுத்தி, அயராது பாடுபட்டால் வளர்ச்சி காண வழிபிறக்கும்.
கணவன்-மனைவி உறவு நிலை சீராகும். எழுத்து, பத்திரிகை, விஞ்ஞானம் போன்ற துறைகள் ஆக்கம் தரும். குரு 3-ல் இருப்பதால், பொருளாதாரம் தவிர்த்த பிற துறைகளில் விழிப்புத் தேவை. 4-ல் செவ்வாயும், ராகுவும் உலவுவதால் சொத்துகள் சம்பந்தமான காரியங்களில் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. பெற்றோர் நலனில் கவனம் தேவை. பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது நல்லது. மார்பு, இதயம் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். மருத்துவச் செலவுகள் சற்று அதிகரிக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள் : நவம்பர் 13, 15.
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, மேற்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், பச்சை, மெரூன்.
எண்கள்: 5, 6, 7, 8.
பரிகாரம்: செவ்வாய், ராகு, குரு ஆகியோருக்குப் பிரீதி செய்யவும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 3-ல் செவ்வாயும் ராகுவும் சுக்கிரனும் உலவுவது சிறப்பு. நண்பர்களும் உறவினர்களும் நலம் புரிவார்கள். நிலம், மனை, வீடு, வாகனங்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய சொத்துகள் வாங்கவும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு ஏற்படும்.
இயந்திரப்பணிகள் லாபம் தரும். பயண ஏற்பாடு, பயண விடுதி மற்றும் பயணம் சார்ந்த தொழில்கள் லாபம் தரும். பொருளாதார நிலை உயரும். கொடுக்கல்-வாங்கள் லாபம் தரும். 17-ம் தேதி முதல் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் சற்று அதிகரிக்கும். கணவன்-மனைவி உறவு நிலை திருப்தி தரும். கடன் உபத்திரவம் குறையும். நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். மக்கள் நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 13, 15, 18.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: புகை நிறம், இளநீலம், பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 3, 4, 6, 9.
பரிகாரம்: சூரிய நாராயணரை வழிபடவும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் சூரியன் 3-ல் உலவுவது சிறப்பு. சுக்கிரன் 2-லும் புதன் 4-லும் இருப்பது சிறப்பு. முன்னேற்றத்துக்கான தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். நண்பர்கள், உறவினர்களது சந்திப்பு நிகழும். புதிய பொருட்கள் சேரும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஓரளவுக்கு உதவுவார்கள். சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும். 2-ல் செவ்வாயும் ராகுவும் இருப்பதால் வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது.
4-ல் சனி உலவுவதால் அலைச்சல் அதிகமாகும். தாய் நலம் பாதிக்கும். ஜன்ம ராசியில் குரு அமர்ந்து 5-ம் இடத்தைப் பார்ப்பதால் பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். மனதில் நல்ல எண்ணங்கள் உருவாகும். 17-ம் தேதி முதல் சூரியன் 4-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. அலைச்சல் மேலும் கூடும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகளால் லாபம் கிடைக்கும். தந்தை நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 13, 15, 18.
திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: வான்நீலம், வெண்மை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 5, 6.
பரிகாரம்: சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும்.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசியில் சுக்கிரனும், 3-ல் சனியும் உலவுவது சிறப்பு. பொருளாதார நிலையில் வளர்ச்சி காண வழிபிறக்கும். குடும்ப நலம் சீராகும். கலைத்துறையினருக்கு அளவோடு நலம் உண்டாகும். நல்லதொரு தகவல் வந்து சேரும். உழைப்பு வீண்போகாது. எதிர்ப்புகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். தகவல் தொடர்பு தொழிலில் ஆதாயம் கிடைக்கும்.
நண்பர்கள் அளவோடு உதவுவார்கள். வாரப் பின்பகுதியில் பிள்ளைகளால் நலம் உண்டாகும். தந்தையால் ஓரளவுக்கு நலம் ஏற்படும். ஜன்ம ராசியில் செவ்வாயும் ராகுவும் உலவுவதால் எதிலும் பதற்றம் வேண்டாம். பயணத்தின்போது விழிப்புத்தேவை. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. உத்தியோகஸ்தர்கள் பொறுப்புடண்ர்ந்து காரியமாற்றினால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 13, 15,18.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம்.
எண்கள்: 6, 8.
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வழிபடவும்.