இரட்டைத் திருப்பதிகளான திருவாலி - திருநகரி என்பது 108 திருப்பதிகளில் ஒன்று. திருமங்கையாழ்வார் அவதாரச் சிறப்பினால் ஏற்றம் பெற்ற தலம். திருமங்கையாழ்வார் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் திருவாலிக்குப் பக்கத்திலுள்ள திருக்குறையலூர் என்கிற ஊரில் அவதரித்தார். ஆழ்வார்களில் கடைசி ஆழ்வார் இவர்.
நீலன் என்பது இவர் இயற்பெயர். சோழ அரசனின் படைத் தளபதியாக இருந்து, திருவாலி பகுதியை ஆண்டார். திருவெள்ளக்குளம் என்கிற ஊரில் பிறந்த குமுதவல்லி நாச்சியாரைத் திருமணம் செய்துகொண்டார். குமுதவல்லி நாச்சியார் இவரின் போர் வெறியைத் தணித்து வைணவராக்கினார்.
தினமும் ஆயிரம் வைணவர் களுக்கு அன்னமிடும்படி வேண்டி அவரை மணந்துகொண்டார் குமுதவல்லி. இதன் விளைவாக, நீலன் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு ஆழ்வாரானார்.
ஆறு பிரபந்தங்களைப் பாடினார் நீலன். இப்பிரபந்தங்கள் வேத அங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு திருத்தலமாகச் சென்று சேவித்து இறைவனைப் புகழ்ந்து பாடிய அருட்பாடல்கள் பெரிய திருமொழி எனப்படும்.
இத்தம்பதிகள், வழிபட்ட சிந்தனைக்கினியான் என்கிற பெருமாள் விக்கிரகத்தை இன்றும் திருநகரி திருக்கோயிலில் தனிச் சந்நிதியில் காணலாம். திருமங்கையாழ்வாருக்கு இச்சந்நிதியில் தனிக் கொடிமரமும் உண்டு. கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் ஆழ்வாருக்கு உற்சவம் நடைபெறுகிறது. அதில் மிக முக்கியமான உற்சவம் கள்வன் கொல் எனும் உற்சவம். ஆழ்வார் ஞானம் கனிந்து பெண் தன்மையில், பரகால நாயகியாகத் தன்னை பாவித்துப் பதிகம் பாடினார். அன்றைய தினம் இத்தலத்துப் பதிகமான, அவரது ‘கள்வன் கொல்’ என்ற பதிகம் சேவிக்கப்படும்.

பட்டுச் சேலையணிந்து, மேலே வெண்பட்டுப் போர்த்தி மோகினிக் கோலத்தில் காட்சி தருவார் ஆழ்வார். பெருமாள் நாயகனாகவும், ஆழ்வார் நாயகியாகவும் காட்சி தரும் இவ்விழா வருடம் ஒரு முறை மட்டுமே காணக் கிடைக்கும்.
இவ்வுற்சவம் 20.11.2015 அன்று மாலை திருநகரியில் நடைபெறுகிறது.