ஆன்மிகம்

நோய் தீர்க்கும் முருக மந்திரம்! 

வி. ராம்ஜி

எத்தகைய பிரச்சினைகளானாலும் அதை கந்தனிடம் வைத்து முறையிட்டால் போதும் அந்தப் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்துவைப்பார் முருகப்பெருமான். தீராத நோய்களையெல்லாம் தீர்த்துவைப்பார் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

சூரனை அழித்த முருகப்பெருமான், சூரனை மட்டுமல்ல... நம் நோயையும் வல்லமை கொண்டவர். நோய் தீர்க்கும் மருத்துவனாகவே திகழ்பவர். இம்மைக்கும் மறுமைக்குமாக அருளக்கூடியவர் முருகக் கடவுள் என்று போற்றுகின்றனர்.

ஆறுபடைவீட்டு நாயகன், வினைகள் அனைத்தையும் தீர்த்துவைப்பான் என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.

முருக மந்திரத்தை தொடர்ந்து ஜபித்து வந்தால், தீராத நோயும் தீரும்.

இந்த மந்திரத்தை உடல்நிலை சரியில்லாதவர்கள் உச்சரிக்க முடியுமெனில் இந்த மந்திரத்தை ஜபிக்கலாம். இயலாதவர்களெனில், அவர்களுக்காக எவர் வேண்டுமானாலும் இந்த மந்திரத்தைச் சொல்லி ஜபிக்கலாம்.

அதேபோல, முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோயிலுக்குச் சென்று நோய்வாய்ப்பட்டவர்களுக்காக முருகக் கடவுளின் சந்நிதியில் நின்று, இந்த மந்திரத்தைச் சொல்லுங்கள்.

முருகப்பெருமானின் மந்திரம் :

ஓம் பாலசுப்ரமணிய

மஹா தேவி புத்ரா

சுவாமி வரவர சுவாஹா!

இந்த மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ சொல்லுங்கள். முடிந்த அளவுக்கு மந்திரத்தைச் சொல்லுங்கள். முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சார்த்துங்கள்.
மேலும் இந்த மந்திரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் சொல்லலாம். செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, சஷ்டி, கார்த்திகை நட்சத்திர தினம் என்று இந்தநாட்களில் சொல்வது இன்னும் வலிமையாக்கும்.

தொடர்ந்து இந்த மந்திரத்தைச் சொல்லி ஜபித்து வந்தால், தீராத நோயும் தீரும். சகல தோஷங்களும் விலகும். எதிர்ப்புகளெல்லாம் தவிடுபொடியாகும். வீடு மனை யோகம் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

SCROLL FOR NEXT