ஆன்மிகம்

கார்த்திகை கடைசி நாள்... கடைசி செவ்வாய்; அம்பாளையும் குமரனையும் வணங்குவோம்! 

வி. ராம்ஜி

கார்த்திகை மாதத்தின் கடைசி நாள் இன்று. மேலும் கார்த்திகை மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை. இந்த அற்புத நாளில், மாலையில் விளக்கேற்றுவோம். அம்பாளையும் திருக்குமரனையும் வழிபடுவோம். நம் இன்னல்களையெல்லாம் போக்கி அருளும் கார்த்திகைச் செவ்வாய் வழிபாட்டை மறக்காதீர்கள். மறக்காமல் வழிபடுங்கள். திருமணத்தடையால் கலங்கித் தவிப்பவர்கள் இன்றைய நாளில் விளக்கேற்றி வழிபடுவது விரைவில் திருமண யோகத்தைக் கொடுக்கும். உத்தியோக மேன்மையை வழங்கும், கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

கார்த்திகை மாதம் என்பது சிவனாருக்கும் உகந்த மாதம். முருகப்பெருமானுக்கும் உகந்த மாதம். அம்பாள் வழிபாட்டுக்கும் உகந்த மாதம். கார்த்திகை மாதம் தொடங்கியதில் இருந்தே எண்ணற்ற ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன. திருவிழாக்கள் அமர்க்களப்பட்டன.
முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் கந்தசஷ்டி விழா விமரிசையாக நடைபெற்றன. சிவனார் குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் முருகக் கடவுள் குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடந்தேறின.

கார்த்திகை மாதம் என்பதே தீப மாதம். தீப வழிபாட்டுகளுக்கான மாதம். இந்த மாதத்தில் வழிபாடுகள் செய்வதும் எவருக்கேனும் உணவு வழங்குவதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும்.

கார்த்திகை மாதத்தின் செவ்வாய்க்கிழமையும் வெள்ளிக்கிழமையும் ரொம்பவே விசேஷமான நாட்கள். இந்த நாட்களில், இல்லத்தில் அம்பாள் துதிகளைப் பாராயணம் செய்து வழிபடுவதும் முருகப்பெருமானை கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து வழிபடுவதும் எண்ணற்ற வலிமையை வழங்கும் என்பது ஐதீகம்.

குறிப்பாக, கார்த்திகைச் செவ்வாய்க்கிழமை நாளில், முருக வழிபாடு செய்வதும் விளக்கேற்றி அம்பாள் வழிபாடு செய்வதும் மிகுந்த பலன்களைத் தரும்.
இன்று செவ்வாய்க்கிழமை. கார்த்திகை மாதத்தின் செவ்வாய்க்கிழமை. கார்த்திகை மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை. மேலும் கார்த்திகை மாதத்தின் கடைசி நாளும் கூட.

இந்த நன்னாளில், இன்றைய நாளில், மாலையில் விளக்கேற்றுங்கள். வாசலிலும் பூஜையறையிலும் விளக்கேற்றுங்கள். முருகக்கடவுளையும் அம்பாளையும் வழிபடுங்கள். அம்பாள் துதி, கனகதாரா ஸ்தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி பாராயணம் செய்யுங்கள்.

கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். கந்தபெருமானுக்கும் அம்பிகைக்கும் உகந்த செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள்.

திருமணத்தடையால் கலங்கித் தவிப்பவர்கள் இன்றைய நாளில் விளக்கேற்றி வழிபடுவது விரைவில் திருமண யோகத்தைக் கொடுக்கும். உத்தியோக மேன்மையை வழங்கும், கடன் தொல்லையில் இருந்து மீட்டெடுக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

SCROLL FOR NEXT