ஆன்மிகம்

ஆன்மிக நிகழ்வு: மழை வேண்டி மந்திர ஜபம்

செய்திப்பிரிவு

உலக நன்மைக்காக மழை வேண்டி வருண மந்திர ஜப உச்சாடனம், குளத்து நீரில் நின்றுகொண்டு பன்னிருவரால் செய்யப்பட்டது. இது சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள பாஷ்யகார ஆதிசென்ன கேசவ பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்றது.

திருப்பதி திருமலை தேவஸ்தான வேதத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வேத பண்டிதர்களான அர்ச்சகர்கள் உள்ளிட்ட பன்னிரெண்டு வேத பண்டிதர்கள், இந்த வருண பூஜையை இத்திருக்கோயிலில் நிகழ்த்தினர்.

வெகு விமரிசையாக நடைபெற்ற இந்தப் பூஜையின் இறுதியில் ஆண்டாளின் `ஆழிமழைக் கண்ணா’ என்று தொடங்கும் பாசுரம் மும்முறை ஓதப்பட்டது.

SCROLL FOR NEXT