ஆதிலட்சுமியை வணங்கினால் ஆயுள் பலம் தருவாள்; ஆரோக்கியம் காத்திடுவாள் ஆதிலட்சுமி.
ஆதி லட்சுமி அஷ்டலட்சுமியரில் ஒரு தேவி. இவளே ஆதிலட்சுமி என்கிறது புராணம். தன் சக்தியை எட்டு விதமாக்கி வியாபித்திருப்பவள் லட்சுமி. அதனால்தான் அஷ்டலட்சுமியாக இருந்து தன்னை வேண்டுவோருக்கு அருளும் பொருளும் அள்ளித் தந்தருள்கிறார் ஆதிலட்சுமி.
ஆதி என்பது ஆரம்பம் என்று அர்த்தம். லட்சுமியரில் ஆரம்பம் இவளே என்கிறது புராணம்.
செவ்வாய்க்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் காலையும் மாலையும் ஆதிலட்சுமியை வணங்கி வழிபடுவது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
ஆதிலட்சுமிக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் ரொம்பவே விசேஷம். ஆகவே இந்த ஸ்லோகத்தைச் சொல்லி, லட்சுமி தேவிக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள்.
ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம் :
த்வி புஜாஞ்ச த்விநேத்ராஞ்ச
சாபயாம் வரதாந்விதாம்
புஷ்யமாலாதராம் தேவீம் அம்புஜாசன
சம்ஸ்த்திதாம் புஷ்ப தோரண சம்யுக்தாம்
ப்ரபா மண்டல மண்டிதாம்
சர்வ லக்ஷண சம்யுக்தாம் சர்வாபரண பூஷிதாம்
பீதாம்பரதராம் தேவீம் மகுடே சாரு ப
ந்தநாம் ஸ்தநோந்நதி சமாயுக்தாம்
பார்ச்மயோர் தீபசக்திகாம்
செளந்தர்ய நிலையாம் சக்திம்
ஆதிலட்சுமி மஹம் பஜே.
இந்த ஸ்லோகத்தை தினமும் முறைப்படி பாராயணம் செய்து வணங்கி வந்தால், எந்தக் காரியமும் தடை, தாமதம் இல்லாமல் நடந்தேறும். அனைத்துச் செயல்களும் முழுவெற்றியைத் தேடித் தரும். தீராத நோயும் தீரும். நீண்ட ஆயுளும் ஆரோக்கியமுமாக வாழ்வீர்கள். ஸ்ரீ ஆதிலட்சுமி நமக்கு அருள்புரிவாள்.