ஆன்மிகம்

நேரலையில்... திருவொற்றியூர் கோயிலின் பிரதோஷ பூஜை; வீட்டிலிருந்தே கண்ணார தரிசனம்; மனதார பிரார்த்தனை!  

வி. ராம்ஜி

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அப்பேர்ப்பட்ட புதன் கிழமை நன்னாளில், பிரதோஷமும் இணைந்து வருகிறது. நாளைய தினம் 14ம் தேதி பிரதோஷம். இந்த நன்னாளில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலின் பிரதோஷ பூஜையை வீட்டில் இருந்தபடி நேரலையில் தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இல்லத்தில் இருந்தபடியே, சிவனாருக்கான பிரதோஷ பூஜை கண்ணார தரிசித்து மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.

சிவ வழிபாட்டில் மிக முக்கியமானது பிரதோஷ பூஜை. அமாவாசைக்கு முந்தைய மூன்றாம் நாளும் பெளர்ணமிக்கு முந்தைய மூன்றாம் நாளும் என மாதத்துக்கு இரண்டு பிரதோஷங்கள் உண்டு. பிரதோஷத்தன்று சிவனாருக்கும் நந்திதேவருக்கும் சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் விமரிசையாக நடைபெறும். பிரதோஷ பூஜையைத் தரிசிப்பது, அளப்பரிய பலன்களைத் தந்தருளும் என்பதும் புண்ணிய பலன்களைப் பெறலாம் என்பதும் ஐதீகம்.

சென்னை திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் மாதாந்திர நிகழ்ச்சிகளில் ஒன்றான பிரதோஷ வழிபாட்டினை ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தொடர்ந்து, பக்தர்கள் பலரும் பிரதோஷம் உள்ளிட்ட முக்கியமான பூஜைகளை, நேரலையில் தரிசித்து வருகிறார்கள்.
நாளைய தினம் 14ம் தேதி புதன்கிழமை பிரதோஷம். திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நடைபெறுகிற பிரதோஷ பூஜையை நேரலையில் தரிசிக்கலாம்.

https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற YouTube channel மூலம், 14.10.2020 புதன் கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு நந்தியம் பெருமான் அபிஷேகத்தையும் அதனைத் தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகத்தையும் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பக்தர்கள் தரிசித்து அருள்மிகு வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜ சுவாமியின் அருளைப் பெறுங்கள்.

மேற்படி YouTube channel-னை subscribe and share செய்யவும்.

இந்தத் தகவலினை தங்கள் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். அனைவரும் பிரதோஷ வழிபாட்டினை, திருவொற்றியூர் தியாகராஜ சுவாமிக்கு நடைபெறும் பிரதோஷ பூஜை கண்ணாரத் தரிசித்து, மனதார வேண்டிக்கொள்ளுங்கள் என்று ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT