காரைக்கால் நித்ய கல்யாணப் பெருமாள் கோயிலில் ஸ்ரீ ஆண்டாள் ரங்க மன்னர் அலங்காரத்தில் காட்சியளித்த நித்ய கல்யாணப் பெருமாள். 
ஆன்மிகம்

காரைக்கால் நித்ய கல்யாணப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத வழிபாடு 

வீ.தமிழன்பன்

காரைக்கால் நித்ய கல்யாணப் பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு இன்று ஸ்ரீ ஆண்டாள் ரங்க மன்னர் அலங்காரத்தில் நித்ய கல்யாணப் பெருமாள் காட்சியளித்தார்.

ஸ்ரீரங்கத்துக்கு இணையாகக் கருதப்படும் காரைக்கால் நித்ய கல்யாணப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத வழிபாடு சிறப்பான வகையில் நடைபெறும். இக்கோயிலில் நிகழாண்டு கடந்த செப்.17-ம் தேதி புரட்டாசி வழிபாடு தொடங்கியது. ஒவ்வொரு சனிக்கிழமையும் உற்சவரான நித்ய கல்யாணப் பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு இன்று (அக்.10) மூலவர் ரங்கநாதர், உற்சவர் நித்யகல்யாணப் பெருமாள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னர், ஸ்ரீ ஆண்டாள் ரங்க மன்னர் அலங்காரத்தில் உற்சவரான நித்ய கல்யாணப் பெருமாள் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். தொடர்ந்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

பக்தர்கள் திரளானோர் முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து, நீண்ட வரிசையில் நின்று பெருமாளைத் தரிசித்துச் சென்றனர்.

SCROLL FOR NEXT