திருமலைவாசனான தனது தந்தைக்கு பிரம்மன் எடுக்கும் உற்சவமே பிரம்மோற்சவம். இந்த ஆண்டு பிரம்மோற்சவம் இரண்டு முறை நடத்தப்படுகிறது. நிலவைக் கொண்டு குறிக்கப்படும் நாட்காட்டியின்படி, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை இரண்டு பிரம்மோற்சவம் நடைபெறும். தற்போது நடைபெற்றுவரும் புரட்டாசி பிரம்மோற்சவம் திருமலையில் கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது. முப்பது முக்கோடி தேவர்களும் இவ்விழாவினைக் காண பூலோகம் வருவதாக ஐதீகம். பூலோக வாசிகளோ, திருமலையில் லட்சக்கணக்கில் கூடுகிறார்கள்.
முதல் நாள் காலை துவஜாரோகணத்துடன் தொடங்கிய பிரமோற்சவத்தின் மாலை நேரத்தில் பெத்த சேஷ வாகனம் என்று வழங்கப்படும் பெரிய சேஷவாகனத்தில் தேவி, பூதேவி சமேதராக உற்சவர் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த உற்சவத்தில் காலையும், மாலையும் உற்சவர் மலையப்ப சுவாமி எழுந்தருளி, திருமலை கோயிலை சுற்றி நான்கு மாட வீதியிலும் உலா வருவார்.
அதன்படி இரண்டாம் நாள் காலை சின்ன சேஷ வாகனம், மாலை ஹம்சம் என்று சொல்லக்கூடிய அன்ன வாகனம், மூன்றாம் நாள் காலை சிம்ம வாகனம், அன்று மாலை முத்து பந்தல், நான்காம் நாள் காலை கல்ப விருஷம், மாலை சர்வ பூபால வாகனம், ஐந்தாம் நாள் காலை மோகினி அவதாரம், மாலை கருட வாகனம். ஆறாம் நாள் காலை அனுமந்த வாகனம், மாலை தங்கத்தேர் மற்றும் யானை வாகனம். ஏழாம் நாள் காலை சூரியப் பிரபை, மாலை சந்திரப் பிரபை, எட்டாம் நாள் ரதோற்சவம், மாலை குதிரை வாகனம், ஒன்பதாம் நாள் காலை பல்லக்கு, கிளி உற்சவம் மற்றும் சக்கர ஸ்நானம், மாலை விழாவின் நிறைவாக கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெறும்.

கருட வாகனம்
கருட வாகனத்தன்று, மஞ்சு கொஞ்சும் மலை முகடுகளில், கார் முகில் வரிசை கட்டியது. தொடர்ந்து சரமழை கொட்டியது. பக்தர்கள், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கோவிந்த தரிசனம் செய்தார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள், பார்வையாளர் படிகளில் அமர்ந்து, தங்க கருட வாகனத்தில் திருவீதி உலா வந்த மலையப்ப சுவாமியை தரிசித்தார்கள். ஈரக்காற்றில் பரவிய குளிர், பக்தர்களின் உடலையும், மலையப்ப சுவாமியின் தரிசனம் அவர்களின் உள்ளத்தையும் குளிரச் செய்தது.
கொட்டும் மழையில் கோலாட்டம் உட்பட பல பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தியபடியே பக்தர்கள் குழாம் சென்றது. அவற்றை தொடர்ந்து வைணவப் பெரியோர்களால் தமிழ் பாசுரங்கள் பாடப்பட, அந்தத் தமிழ் மொழிக்கு கட்டுண்ட எம்பெருமான் பின்தொடர்ந்தார். பக்தர்கள் பக்தியில் அன்னமையா கிருதிகளை பாடிச் சென்றனர். பூலோக வைகுண்டம் திருமலை. பக்தர்கள் அனைவருக்கும் இலவச உணவு, தண்ணீர் ஆகியவை தாராளமாகக் கிடைக்கும்படி விரிவான ஏற்பாடுகள் செய்திருந்தது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.
புரட்டாசி மாதம் கோவிந்த தரிசனம் கோடி புண்ணியம் அளிக்கும் என்பது ஐதீகம். மேலும் கருட தரிசனம் புண்ணிய பலனை விரைந்து அளிக்கும் என்பது நம்பிக்கை. ஓம் நமோ வேங்கடேசாயா என்ற கோஷம் இன்னும் மன அறைகளில் ஒலிக்கிறது.