வாராஹி என்பவள் சக்திவாய்ந்தவள். வளர்பிறை பஞ்சமியில் வாராஹிதேவியை மனதார வணங்கி வந்தால், நம் கஷ்டங்களெல்லாம் காணாமல் போகும். துக்கங்களெல்லாம் மறைந்துபோகும். இல்லத்தில் நிம்மதியும் ஆனந்தமும் நிலைத்து நிற்கும். பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள்.
வராஹி காயத்ரி மந்திரத்தை, வளர்பிறை பஞ்சமி திதி நாளில் சொல்லி வந்தால், அனைத்து சத்விஷயங்களையும் தந்தருள்வாள் தேவி எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்.
வராஹி காயத்ரி மந்திரம்
ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தந்நோ வாராஹி ப்ரசோதயாத்
இந்த காயத்ரி மந்திரத்தை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் 11 முறை ஜபித்து வேண்டிக்கொள்ளுங்கள். அப்போது வாராஹி தேவிக்கு, செவ்வரளி மாலை சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். எலுமிச்சை சாதம் அல்லது சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்து உங்கள் கோரிக்கைகளை அவளிடம் சொல்லுங்கள்.
அதேபோல், வராஹியின் மூலமந்திரமும் மகா சக்திகொண்டது. மகத்துவமான சக்தியை வழங்கவல்லது.
ஸ்ரீ வராஹி மூல மந்திரம் :
ஓம் க்லீம் உன்மத்தபைரவி வாராஹி
ஸ்வ்ப்பனம் ட: ட: ஹும்பட் ஸ்வாஹா.
என்பதையும்
ஓம் ஐம் க்லெளம் ஐம் நமோ பகவதீ வார்த் தாளி, வார்த்தளி
வராஹி வராஹமுகி வராஹமுகி
அந்தே அந்தினி நம :
ருத்தே ருந்தினி நம :
ஜம்பே ஜம்பினி நம :
மோஹே மோஹினி நம :
ஸதம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்
ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி
ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு
சீக்ரம் வச்யம் ஐம் க்லெளம்
ஐம் ட : ட : ட : ட :ஹும் அஸ்த்ராயபட்
ஓம் வாம் வாராஹி நம:
ஓம் வ்ரூம் ஸாம் வாராஹி கன்யகாயை நம:
எனும் ஸ்லோகத்தையும் மனதாரச் சொல்லி வழிபடுங்கள். 11 முறை சொல்லி வழிபடுங்கள். இல்லத்தில் கணவன் மனைவி இடையேயான ஒற்றுமை பலப்படும்.பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள். இல்லத்தில் இதுவரை இருந்த குழப்பங்கள் யாவும் முடிவுக்கு வரும். நிம்மதியையும் அமைதியையும் இல்லத்தில் நிறைக்கச் செய்வாள் வராஹி தேவி.