ஆன்மிகம்

நேரலையில் ராகுகாலம், பிரதோஷம், ஆடி கடைசி பிரதோஷம்; வீட்டிலிருந்தே ஆன்லைனில் தரிசிக்க திருவொற்றியூர் கோயில் ஏற்பாடு

வி. ராம்ஜி

ஆடி மாதத்தின் கடைசி பிரதோஷம் இன்று. ஞாயிற்றுக்கிழமை ராகுகாலமும் பிரதோஷமும் கூடி வரும் அற்புத நேரத்தில் நடைபெறும் சிவபூஜையை தரிசிப்பது ரொம்பவே விசேஷம். இந்த அற்புதத் தரிசனத்தை, வீட்டில் இருந்தே தரிசிக்கவும் சிவ பலன்களைப் பெறவும் திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் மாதாந்திர நிகழ்ச்சிகளில் ஒன்றான பிரதோஷ வழிபாட்டினை ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பபி வருகிறது கோயில் நிர்வாகம்.

பக்தர்கள் https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற YouTube channel மூலம், இன்று 16.08.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4.00 மணிக்கு நந்தியம் பெருமான் அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து பிரதோஷ நாயகர் அபிஷேகமும் நேரலை மூலம் ஒளிபரப்பாகிஅது. பக்தர்கள் தரிசித்து அருள்மிகு வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜ சுவாமியின் அருளைப் பெறலாம்.

மேற்படி YouTube channel-னை subscribe and share செய்யவும், இந்த தகவலினை தங்கள் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்குக் கிடைப்பது போலவே அவர்களுக்கும் சிவனருள் கிடைக்கட்டும். அவர்களும் நிம்மதியும் அமைதியுமான வாழ்க்கையை வாழட்டும்.

ஆடி மாதத்தின் கடைசி பிரதோஷம் இன்று. ஞாயிற்றுக்கிழமையில் ராகுகாலம் மாலை 4.30 முதல் 6 மணி வரை. பொதுவாகவே பிரதோஷ நேரம் என்பதும் மாலை 4.30 முதல் 6 மணி வரையும்தான்.

எனவே, மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆடி மாத கடைசி பிரதோஷத்தை, ராகுகாலமும் பிரதோஷமும் கூடிய அற்புதமான பிரதோஷத்தை, கண்ணையும் மனதையும் குளிர்விக்கும் பிரதோஷ அபிஷேகத்தை, மகத்துவம் வாய்ந்த திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நடைபெறும் பூஜையை இன்று (16.8.2020) நேரலையில் கண்டு தென்னாடுடைய சிவனாரின் பேரருளைப் பெறுங்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT