சித்திரை மாதத்தின் சஷ்டி, செவ்வாய்க்கிழமை. முருகக் கடவுளை வணங்குங்கள். எல்லாக் கஷ்டத்தில் இருந்தும் துக்கத்தில் இருந்தும் விடுபடுவீர்கள். இன்று 12.5.2020 செவ்வாய்க்கிழமை சஷ்டி. கந்தவேலனுக்கு உரிய அற்புதமான நாள்.
முருகப்பெருமானுக்கு உரிய நன்னாளில் கந்தகுமாரனை வழிபடுங்கள். பலமும் வளமும் தந்தருள்வார் வேலவன். நம் எதிர்ப்பெல்லாம் தூள்தூளாக்கிவிடுவார் வெற்றிவேல் முருகன்.
பொதுவாகவே, சஷ்டி என்பது முருகப்பெருமானுக்கு உரிய அற்புதமான, வழிபாட்டுக்கு உரிய நாள். அதேபோல் செவ்வாய்க்கிழமை என்பதும் முருகக் கடவுளை வழிபடுவதற்கு உரிய அருமையான நாள்.
சித்திரை மாதத்தில், சஷ்டியும் ஒருசேர வருவது கூடுதல் சிறப்பு. இன்னும் விசேஷம். இந்தநாளில், விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி வழிபடுவது கூடுதல் பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
விரதம் மேற்கொள்ள இயலாதவர்கள் வருந்தத் தேவையில்லை. வீட்டில் விளக்கேற்றி, முருகப்பெருமானைத் துதிக்கும் பாடல்களைப் பாராயணம் செய்வதும், கந்தசஷ்டி கவசம் படிப்பதும் மிகுந்த பலனைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
இன்று 12.5.19 செவ்வாய்கிழமை சஷ்டி. வெள்ளிக்கிழமையும் சஷ்டியும் இணைந்திருக்கும் நாளில், சித்திரை மாதத்து வெள்ளியும் சஷ்டியும் இணைந்திருக்கும் இந்த வேளையில், மாலையில்
வீட்டில் முருகன் படத்துக்கு செந்நிற மலர்கள் சூட்டி வழிபடுங்கள். வீட்டு பூஜையறையிலும் அசுரர்களையெல்லாம் அழித்தொழிக்கும் வேலவனை மனதில் நிறுத்தி, வாசலில் விளக்கேற்றுங்கள்.
முடிந்தால், செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும். சர்க்கரைப் பொங்கல் அல்லது தயிர்சாதம் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, அந்தப் பிரசாதத்தை அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள்.
செவ்வாய் முதலான தோஷங்கள் விலகும். எதிர்ப்புகள் தூள்தூளாகும். கடன் தொல்லையில் இருந்தும் வழக்குச் சிக்கல்களில் இருந்தும் மீண்டுவருவீர்கள். தீயசக்திகளையெல்லாம் துவம்சம் செய்து அருளுவார் சக்திவேல் முருகன்.