வி.ராம்ஜி
மார்கழி 1, டிசம்பர் 17, செவ்வாய்க்கிழமை. சஷ்டி. சகல ஆலயங்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை உத்ஸவம் ஆரம்பம். தனுர் மாத பூஜை தொடக்கம்.
மார்கழி 2, டிசம்பர் 18, புதன்கிழமை. சப்தமி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்ம மூர்த்திகு திருமஞ்சன சேவை.
மார்கழி 3, டிசம்பர் 19, வியாழக்கிழமை. அஷ்டமி. மதுரை மீனாட்சி அம்பாள் சொக்கநாதர் சகல ஜீவராசிகளுக்கும் படி அளந்து அருளிய காட்சி.
மார்கழி 4, டிசம்பர் 20, வெள்ளிக்கிழமை. நவமி. சேஷாத்ரி சுவாமிகள் ஆராதனை. சங்கரன்கோவில் ஸ்ரீசங்கரநாராயணர் கோயிலில் கோமதி அம்பாள் தங்கப்பாவாடை தரிசனம். திருவிடை மருதூர் பிரகத் குஜாம்பிகை புறப்பாடு.
மார்கழி 5, டிசம்பர் 21, சனிக்கிழமை. தசமி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலில் வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை.
மார்கழி 6, டிசம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை. ஏகாதசி. பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு. மானக்கஞ்சாற நாயனார் குருபூஜை.
மார்கழி 7, டிசம்பர் 23, திங்கட்கிழமை. துவாதசி. திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். சோம வார மகா பிரதோஷம். காஞ்சி மகா பெரியவா ஆராதனை.
மார்கழி 8, டிசம்பர் 24, செவ்வாய்க்கிழமை. திரயோதசி. மாத சிவராத்திரி.
மார்கழி 9, டிசம்பர் 25, புதன்கிழமை. சதுர்த்தசி. திருவையாறு அமரதீர்த்தம். பாம்பன் சுவாமிகள் மயூர வாகன சேவை.
மார்கழி 10, டிசம்பர் 26, வியாழக்கிழமை. அமாவாசை. அனுமன் ஜயந்தி. சூரிய கிரகணம்.மதுரை கூடலழகர் சந்நிதியில் பெரியாழ்வார் வென்ற கிளி விலாசம் எழுந்தருளி பரத்துவம் நிர்ணயம் செய்யும் காட்சி.