ஆன்மிகம்

ஐப்பசி விசேஷங்கள்! இந்த வார விசேஷங்கள்

செய்திப்பிரிவு

ஐப்பசி 1, அக்டோபர் 18, வெள்ளிக்கிழமை. ஐப்பசி துலா ஸ்நானம் ஆரம்பம். துலா விஷு ஆரம்பம். நெல்லை காந்திமதி காலையில் கமலவாகனத்திலும் இரவு ரிஷப வாகனத்திலும் பவனி. திருப்பராய்த்துறை தாருகவனேஸ்வரர் தீர்த்தம்.

ஐப்பசி 2. அக்டோபர் 19. சனிக்கிழமை. கிருஷ்ண பட்ச சஷ்டி. சேங்காலிபுரம் ஸ்ரீஅனந்தராம தீட்சிதர் ஆராதனை. தூத்துக்குடி பாகம்பிரியாள் புறப்பாடு. குச்சனூர் சனீஸ்வர பகவான் சிறப்பு வழிபாடு.

ஐப்பசி 3. அக்டோபர் 20. ஞாயிற்றுக்கிழமை. கீழ்த்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சந்நிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சனம்.

ஐப்பசி 4. அக்டோபர் 21. திங்கட்கிழமை. பத்ராசலம் ஸ்ரீராமர் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதி அம்பாள் புஷ்பப் பாவாடை தரிசனம். கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் திருவீதியுலா.

ஐப்பசி 5. அக்டோபர் 22. செவ்வாய்க்கிழமை. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

ஐப்பசி 6. அக்டோபர் 23. புதன்கிழமை. திருநெல்வேலி காந்திமதி அம்மன் ரதோத்ஸவம். ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் உத்ஸவம் ஆரம்பம்.

ஐப்பசி 7. அக்டோபர் 24. வியாழக்கிழமை. கிருஷ்ண பட்ச ஏகாதசி. காஞ்சி காமாட்சி தபஸ் ஆரம்பம். ஸ்ரீரங்கம் டோலோத்ஸவ சாற்றுமுறை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

ஐப்பசி 8. அக்டோபர் 25. வெள்ளிக்கிழமை. கிருஷ்ண பட்ச மகா பிரதோஷம். தென்காசி, பத்தமடை, வீரவநல்லூர், தூத்துக்குடி, கடையம் ஆகிய தலங்களில் திருக்கல்யாண வைபவம்.

SCROLL FOR NEXT