ஆன்மிகம்

கீரை மஸ்தான் சித்தர்

செய்திப்பிரிவு

மகாகவி பாரதியார் பிறந்த மண்ணில் தவசி தம்பிரான் என்னும் மகாசித்தர் ஒருவர் இருந்தார். இவரது சீடராக மேற்கு வங்கத்தைச் சார்ந்த ஒரு துறவி எட்டயபுரம் வந்தார். குருவிற்குப் பணிவிடை செய்வதில் மகிழ்ந்து, எட்டயபுரத்திலேயே தங்கிவிட்டார்.

இவரது தினசரி உணவு, கீரையை நன்றாகக் கடைந்து அந்தக் கீரை மசியலைச் சாப்பிடுவது மட்டுமே. இதனால் இவர் ‘கீரை மசியல் சித்தர்’ எனப் பெயர் பெற்றார். காலப்போக்கில் ‘கீரை மஸ்தான் சித்தர்’ என்று அழைக்கப்பட்டார்.

பல சித்து விளையாடல்களைப் புரிந்து நோயுற்ற பலருக்கு சுகமளித்தும் வந்தார். எட்டயபுரத்திலுள்ள ஒரு பெரிய கிணற்றில் நீச்சலடித்துக் குளிக்கும்போது, இவரது உடல் ஒன்பது பாகங்களாகப் பிரிந்து மிதக்குமாம். இவர் எட்டயபுரம் சமஸ்தானத்திற்குச் சிறந்த வேலைப்பாடுகள் நிறைந்த பொன்னாலான சரஸ்வதி சிலையைப் பரிசாகக் கொடுத்துள்ளார்.

அந்தச் சிலையை அவர் தனது அற்புத சக்தியால் உருவாக்கியதாக இன்றும் நம்பப்படுகிறது. கீரை மசியல் சித்தர் 1864-ல் ஜீவசமாதியானார்.

தகவல்: இரா.சிவானந்தம்

SCROLL FOR NEXT