அம்பிகைக்கு உரிய அற்புதமான வைபவம் நவராத்திரிப் பெருவிழா. புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தின் ஒப்பற்ற விழா இது.
மகாளய பட்ச அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமையில் இருந்து தொடங்கும் ஒன்பது நாளும், வீடுகளிலும் கோயில்களும் கொலு வைபவம், தரிசனம் என ஒவ்வொரு தெருக்களும், வீடுகளும் அமர்க்களப்படும்.
விதம்விதமான பொம்மைகளைக் கொண்டு, அவரவரும் தங்கள் கற்பனைத் திறனையும் சேர்த்து, பிரமிக்க வைத்துவிடுவார்கள்.
இந்த முறை நவராத்திரியில், பெரும்பான்மையான வீடுகளில், ஆலயங்களில் கொலு நாயகன் யார் தெரியுமா? 40 வருடங்களுக்கு ஒரு முறை தரிசனம் தருகிற, சமீபத்தில் அப்படியொரு அற்புதமான தரிசனத்தைத் தந்த காஞ்சி அத்திவரதர்தான் இந்த முறை நவராத்திரியின் ஹீரோ.
நவராத்திரி ஹீரோ அத்திவரதர் வீடியோவைக் காண :