ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள்

செய்திப்பிரிவு

வி.ராம்ஜி


செப்டம்பர் 1 - ஆவணி 15 - ஞாயிற்றுக்கிழமை. திருவாரூர் மடப்புரம் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் குருபூஜை. கெளரி விரதம். ஹரித்ரா கெளரி விரதம். மறைஞான சம்பந்தர் நாயனார் குருபூஜை.

செப்டம்பர் 2. ஆவணி 16. திங்கட்கிழமை. விநாயக சதுர்த்தி விரதம். பாதூர் கருட சேவை. முக்கூர் அழகிய சிங்கர் திருநட்சத்திரம். திருவலஞ்சுழி ஸ்வேத விநாயகர் தேரோட்டம்.

செப்டம்பர் 3. ஆவணி 17. செவ்வாய்க்கிழமை. ரிஷி பஞ்சமி. மதுராந்தகம் ஸ்ரீபாஷ்யக்காரர் பஞ்ச சம்ஸ்கார உத்ஸவம். மகாலக்ஷ்மி விரதம். மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண சுவாமி மச்சாவதார திருக்கோலம்.

செப்டம்பர் 4. ஆவணி 18. புதன்கிழமை. சஷ்டி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.

செப்டம்பர் 5. ஆவணி 19. வியாழக்கிழமை. குலச்சிறையார் குரு பூஜை.

செப்டம்பர் 6. ஆவணி 20. வெள்ளிக்கிழமை. தூர்வாஷ்டமி. ஜேஷ்டாஷ்டமி. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல். தங்கப்பல்லக்கில் புறப்பாடு.

SCROLL FOR NEXT