வி.ராம்ஜி
ஆவணி அமாவாசையன்று தர்ப்பணம் செய்து பித்ருக்களை ஆராதித்து அவர்களின் ஆசியைப்பெறுவோம். நாளை வெள்ளிக்கிழமை 30.8.19 அமாவாசை. எனவே மறக்காமல் பித்ருக்களை ஆராதிப்போம். அவர்களை நினைத்து நான்குபேருக்கு உணவுப் பொட்டலம் வழங்குவோம். அவர்களின் ஆசியைப் பெறுவோம்.
மாதந்தோறும் அமாவாசையின் போது, பித்ருக்களை நினைத்து அவர்களுக்கு ஆராதனைகள் செய்யவேண்டும் என்கிறது சாஸ்திரம். வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் செய்யச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள்.
மாதந்தோறும் அமாவாசை, புரட்டாசி மகாளய பட்ச காலம், கிரகண காலம் என 96 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும். நாளைய தினம் 30.8.19 வெள்ளிக்கிழமை அமாவாசை. ஆவணி மாத அமாவாசை.
இந்த அமாவாசை நாளில், முன்னோரை ஆராதித்து தர்ப்பணம் செய்யுங்கள். அவர்களின் படங்களுக்கு பூக்களால் அலங்கரித்து, தீபதூபம் காட்டுங்கள். இந்த அமாவாசை நாளில், காகத்துக்கு மறக்காமல் உணவிடுங்கள்.
மேலும், நான்கு பேருக்கேனும் முன்னோரை நினைத்து உணவுப் பொட்டலம் வழங்குங்கள். இதில் பித்ருக்கள் குளிர்ந்து போவார்கள். உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் குளிரக் குளிர ஆசீர்வதிப்பார்கள். பித்ருக்கள் சாபமெல்லாம் நீங்கும். உங்கள் வம்சத்தை வாழையடி வாழையென வாழச் செய்வார்கள் பித்ருக்கள்.