துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும் 11-ல் குருவும் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் எதிர்ப்புகள் விலகும். மனதில் தெளிவும் தன்னம்பிக்கையும் கூடும். ஆன்மிக, அறநிலையப்பணிகள் ஆக்கம் தரும். தியானம், யோகா ஆகியவற்றில் ஈடுபாடு உண்டாகும். பணப் புழக்கம் திருப்திகரமாக இருந்து வரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும்.
எதிர்ப்புகள் விலகும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். தனவந்தர் சகாயம் உண்டாகும். கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும். பெண்களின் எண்ணம் ஈடேறும். ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளால் ஆதாயம் கிடைக்கும். பெண்களால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை கூடும். கூட்டுத் தொழில் லாபம் தரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். பிள்ளைகளுக்கு உற்சாகமான சூழ்நிலை உருவாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 10, 11, 15 சுமாரானவை.
திசைகள்: வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், பச்சை, இள நீலம், வெண்மை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 7.
பரிகாரம்:
துர்கையம்மனைத் தொடர்ந்து வழிபடவும்.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் புதனும், 11-ல் ராகுவும் உலவுவது விசேஷமாகும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். போக்குவரத்து துறையால் ஆதாயம் கிடைக்கும். பயணம் சார்ந்த தொழில்கள் லாபம் தரும். திடீர் பொருள்வரவு உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள்.
சூரியன், செவ்வாய், சனி, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் மனதில் ஏதேனும் சலனம் இருந்துவரும். பிள்ளைகள் நலனில் கவனம் தேவை. தீ, மின்சாரம், ஆயுதம், இயந்திரம் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும்போது பாதுகாப்பு தேவை. வீண் விவகாரங்களில் ஈடுபடலாகாது. அரசியல், நிர்வாகம், பொறியியல், சட்டம், காவல், ராணுவம் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் சங்கடங்கள் சூழும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 12, 13.
திசைகள்: தென்மேற்கு, வடக்கு.
நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், பச்சை.
எண்கள்: 4, 5.
பரிகாரம்:
சுப்பிரமணியரை வழிபடவும். சுப்பிரமணிய புஜங்கம் வாசிப்பதோ, கேட்பதோ நல்லது.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 9-ல் குருவும், சுக்கிரனும் 10-ல் ராகுவும், 11-ல் சனியும் உலவுவது சிறப்பு. அலைச்சல் வீண்போகாது. உழைப்புக்குரிய பயன் கிடைக்கவே செய்யும். பொது நலப்பணிகளில் ஆர்வம் கூடும். நண்பர்கள், உறவினர்களால் அளவோடு அனுகூலம் உண்டாகும். பிள்ளைகள் நலம் மகிழ்ச்சி தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும்.
பணப் புழக்கம் அதிகமாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். பெரியவர்களும் தனவந்தர்களும் வளர்ச்சிக்கு உதவுவார்கள். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். பெண்களின் நிலை உயரும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 12, 13.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, மேற்கு.
நிறங்கள்: புகை நிறம். வெண்மை, கறுப்பு, இளநீலம், பொன் நிறம்.
எண்கள்: 3, 4, 6, 8.
பரிகாரம்: விநாயகர், சுப்பிரமணியரை வழிபடுவது நல்லது.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 6-ல் சூரியனும் செவ்வாயும் புதனும், 8-ல் சுக்கிரனும், 10-ல் சனியும் உலவுவதால் திட, வீர, பராக்கிரமம் வெளிப்படும். எதிர்ப்புகளைக் கடந்து வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்கள், நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள், இயந்திரப்பணியாளர்கள், வியாபாரிகள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும்.
போட்டிகளிலும், விளையாட்டுகளிலும், வழக்கிலும் வெற்றி காணச் சந்தர்ப்பம் உருவாகும். எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் வரவேற்பு கூடப்பெறுவார்கள். கலைஞர்களது நிலை உயரும். உழைப்பு வீண்போகாது. குரு 8-ல் இருப்பதால் பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 12, 13.
திசைகள்: மேற்கு, வடமேற்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு.
நிறங்கள்: சிவப்பு, பச்சை, நீலம், மெரூன்.
எண்கள்: 1, 5, 6, 7, 8, 9.
பரிகாரம்:
நவக்கிரகங்களில் குருவுக்கும் குருவுக்கு அதிதேவதையான தட்சிணாமூர்த்திக்கும் அர்ச்சனை செய்வது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 7-ல் குரு உலவுவது சிறப்பு. அந்தஸ்தும் மதிப்பும் உயரும். உடல் நலம் சீராகும். மனதில் தெளிவு பிறக்கும். பிரச்சினைகள் குறையும். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோரால் நலம் உண்டாகும். பண வரவு சற்று கூடும். முயற்சிகள் பலிக்கும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாழ்க்கைத் துணையால் அனுகூலம் உண்டாகும்.
உடன் பிறந்தவர்களாலும், உடன் பணிபுரிபவர்களாலும் நலம் அதிகரிக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்பு இப்போது உருவாகும். திருமணம் ஆனவர்களுக்கு இல்லறம் இனிக்கும். நல்ல அணுகுமுறையால் பிறரைக் கவருவீர்கள். புத்திசாலித்தனம் பளிச்சிடும். உயர் பொறுப்புகளும் பதவிகளும் தேடி வரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 12, 13.
திசைகள்: வடக்கு, மேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: நீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 8.
பரிகாரம்:
சர்ப்ப சாந்தி செய்வது நல்லது. விநாயகர், துர்கையை வழிபடவும்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் புதன் உலவுவது மட்டுமே சிறப்பு. புதனும் சூரியனுடனும் செவ்வாயுடனும் கூடியிருப்பது குறை. இதனால் எதிலும் முழுமையான வளர்ச்சியைக் காண இயலாது. சிறுசிறு இடர்பாடுகள் அவ்வப்போது ஏற்படவே செய்யும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும்.
வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. தொழில் அதிபர்கள் விழிப்புடன் செயல்படுவது அவசியம். சனி 8-ல் இருப்பதும், சூரியன், செவ்வாய் ஆகியோர் 4-ல் இருப்பதும், ராசிநாதன் 6-ல் இருப்பதும் குறை. சுகம் குறையும். பெண்களால் மன அமைதி குறையும். வீண் வம்பு, வழக்குகள் ஏற்படும். அதிகம் உழைக்க வேண்டிவரும். இதயம், மார்பு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. ஜாதக பலமும் குறைந்திருப்பவர்கள் தெய்வப் பணிகளில் ஈடுபடுவதன் மூலம் அமைதி காணலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 12, 13.
திசை: வடக்கு.
நிறங்கள்: பச்சை, ரோஸ்.
எண்: 5
பரிகாரம்: நவக்கிரகங்களை வழிபடுவது நல்லது.