துலாம் ராசி வாசகர்களே,
உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும் 8-ல் புதனும் சஞ்சரிப்பதால் மனத்துணிவு கூடும். எதிர்ப்புகளைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் ஏற்படும். நல்ல தகவல் வந்து சேரும். நிலபுலங்களால் ஓரளவு ஆதாயம் கிடைத்துவரும். மாணவர்களது நிலை உயரும். மக்களால் அளவோடு நலம் உண்டாகும்.
பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மனத்தெளிவு பிறக்கும். 2-ல் சனியும், 8-ல் சூரியன், செவ்வாய் ஆகியோரும் உலவுவதால் உடல்நலனில் கவனம் தேவை. அரசு விவகாரங்களில் விழிப்புத் தேவை. வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. தொழில் ரீதியாகச் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 4, 7, 8.
திசைகள்: வடமேற்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், பச்சை, இளநீலம், வெண்மை.
எண்கள்: 5, 6, 7.
பரிகாரம்: சூரியன், செவ்வாய், ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது.
விருச்சிக ராசி வாசகர்களே,
உங்கள் ராசிக்கு 9-ல் குருவும் சுக்கிரனும் 11-ல், ராகுவும் உலவுவது விசேடமாகும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காண வழிபிறக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். முன்னேற்றத்துக்கான தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். போட்டிகளில் வெற்றி கிட்டும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.
நல்லவர்கள் உங்களுக்குப் பக்க பலமாக இருப்பார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில், வர்த்தகம் வளர்ச்சி பெறும். வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். ஜன்ம ராசியில் சனியும், 5-ல் கேதுவும் 7-ல் சூரியன், செவ்வாய், புதன் ஆகியோரும் உலவுவதால் மனத்தில் ஏதேனும் சலனம் ஏற்பட்டு விலகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 4, 7, 8.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், பொன் நிறம், வான் நீலம்.
எண்கள்: 3, 4, 6.
பரிகாரம்: சனிக்கும் கேதுவுக்கும் பிரீதி செய்வது அவசியமாகும். ஆஞ்சநேயரையும், விநாயகரையும் வழிபடவும்.
தனுசு ராசி வாசகர்களே,
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் செவ்வாயும் புதனும் 8-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். அரசு உதவி கிடைக்கும். நிர்வாகத் திறமையாலும் செயல்வேகத்தாலும் ஓரிரு சாதனைகளை ஆற்றுவீர்கள். பொறியியல், சட்டம், காவல், ராணுவம், போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவார்கள்.
பொருளாதார நிலை உயரும். அயல்நாட்டுத் தொடர்பு ஆக்கம் தரும். பயணத்தால் அனுகூலம் ஏற்படும். பொருள் திரட்டுவதில் ஆர்வம் கூடும். மக்களால் மன அமைதி குறையும். வீண் செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 4, 7, 8.
திசைகள்: தென்மேற்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: சிவப்பு, புகை நிறம். ஆரஞ்சு, பச்சை, வெண்மை.
எண்கள்: 1, 4, 5, 6, 9. .
பரிகாரம்: குரு, சனி, கேது ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. வேதம் படித்தவர்களுக்கும் கால் ஊனமுள்ளவர்களுக்கும் உதவுவது நல்லது.
மகர ராசி வாசகர்களே,
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 7-ல் குருவும், 11-ல் சனியும் உலவுவதால் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். நல்லவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருந்துவரும். பொருளாதார நிலை உயரும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள் லாபம் தரும்.
சமுதாய நல முன்னேற்றப் பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். 5-ல் சூரியன், செவ்வாய், புதன் ஆகியோரும் 9-ல் ராகுவும் உலவுவதால் மக்களாலும் தந்தையாலும் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். வாரப் பின்பகுதியில் பண வரவு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவரால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 7, 8.
திசைகள்: மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: நீலம், மெரூன், பொன் நிறம்.
எண்கள்: 3, 7, 8..
பரிகாரம்: சூரிய வழிபாடு செய்வது நல்லது. ஆதித்ய ஹ்ருதயம் படிப்பது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே,
உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் 10-ல் சனியும் உலவுவதால் செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். உழைப்புக்குரிய பயன் கிடைத்துவரும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். அவர்களால் சில இடர்ப்பாடுகளும் ஏற்படும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்படும்.
பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு தேவை. மக்களாலும் வாழ்க்கைத் துணைவராலும் மன அமைதி கெடும். பெண்களுக்குப் பிரச்சினைகள் சூழும். கலைஞர்கள் பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். புதிய முயற்சிகளை ஒத்திப்போடவும். தொழில் அதிபர்கள் புதிய துறைகளில் அதிகம் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. ஆடவர்களுக்குப் பெண்களால் சங்கடம் உண்டாகும் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 4, 8.
திசைகள்: மேற்கு, வடக்கு.
நிறங்கள்: கருநீலம், பச்சை.
எண்கள்: 5, 8 .
பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிப்பது நல்லது.
மீன ராசி வாசகர்களே,
உங்கள் ராசிநாதன் குரு 5-மிடத்தில் சுக்கிரனுடன் உலவுவது விசேடமாகும். 3-ல் சூரியன், செவ்வாய் ஆகியோர் சஞ்சரிப்பதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். பண நடமாட்டம் வார முன்பகுதியில் கூடும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். மகப்பேறு பாக்கியம் உண்டாகும்.
குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். உத்தியோகஸ்தர்களது எண்ணம் நிறைவேறும். வாரப் பின்பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். புத பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 4, 7.
திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு, வடகிழக்கு, தெற்கு.
நிறங்கள்: இளநீலம், ஆரஞ்சு, சிவப்பு, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 6, 9.
பரிகாரம்: ராகு, கேது, புதன் ஆகியோருக்கு அர்ச்சனை செய்வது நல்லது. விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதும் கேட்பதும் நல்லது. விநாயகரை வழிபட்ட பின்பு எக்காரியத்திலும் ஈடுபடவும்.