ஆன்மிகம்

பேதைமை செய்யும் கண்கள்

ஸ்ரீ விஷ்ணு

ஸ்ரீரங்கம் பள்ளிகொண்டப் பெருமாளை திருவடியில் தொடங்கித் திருமுடி வரை சேவிக்கவேண்டும் என்பது ஐதிகம்.

அரவிந்த நயனனான ஸ்ரீரங்கத்துப் பெருமானை `பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே’ என்று போற்றிப் பாடுகிறார் ஆழ்வார். இப்பாசுரத்துக்கு ஏற்ப அவரது கண்கள் விரிந்த தாமரை இதழ் போல் காணப்படுகின்றன.

அன்பையும் அமைதியையும் பொழியும் அந்தக் கண்களை `திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும்கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேல் சாபம் இழிந்தேலோரெம்பாவாய்’ என்று போற்றுகிறாள் ஆண்டாள்.

ஸ்ரீரங்கத்துப் பெருமாளின் கண்கள் அருகருகே ஒரு சேர சூரியனின் வளர்ச்சி தரும் ஓளியையும், சந்திரனின் குளிர்ச்சி தரும் ஓளியையும் கொண்டு பக்தர்களின் சாபங்கள் எல்லாம் தீய்ந்துபோய், வளம் பெருகும் வாழ்வு தரும் என்கிறாள் ஆண்டாள்.

SCROLL FOR NEXT