ஆன்மிகம்

திருத்தலம் அறிமுகம்: மனக் கவலை நீக்கும் கைலாசநாதர்

ஆர்.செளந்தர்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாப்பட்டியில் அமைந்துள்ள கைலாசநாதர் திருக்கோவில் அகஸ்தியரால் போற்றப்பட்டது. ஆயிரத்து 800 ஆண்டுகள் பழமை கொண்டது. இக்கோவிலில் சட்டநாத மாமுனிவர் தியானம் செய்து சென்றுள்ளதாகத் தல வரலாறு கூறுகிறது.

குடவரை விநாயகர்

திருக்கோவிலின் நுழைவாயில் அருகே மலையடிவாரத்தில் ஸ்ரீ வெள்ளை விநாயகர் குடவரை விநாயகராக உள்ளார். இக்கோவிலின் பின்னணியில் மேற்குத் தொடர்ச்சி மலை திருவாச்சி போன்று அமைந்திருப்பது கூடுதல் எழிலைத் தருகிறது. ஒன்பது குன்றுகளாக ஆன மலையைச் சுற்றி கிரிவழிப்பாதை அமைந்துள்ளது.

இந்த மலையில் மூலிகைச் செடிகளும், மரங்களும் அதிகமாக இருப்பதால் மூலிகைக் காற்று உடலை அமைதிப்படுத்துகிறது. இவ்விடத்தில் தியானம் செய்தால் மனக்கவலை நீங்கி, மனஅமைதி ஏற்படுவதாகப் பக்தர்கள் கூறுகின்றனர்.

காலசந்தி

பூஜை காலை ஒன்பது மணிக்கும், சாயரட்சை பூஜை இரவு ஏழு மணிக்கும் நடைபெறுகிறது. தினசரி காலை 7.15 முதல் 11 மணி வரை, மாலை நான்கு முதல் இரவு 7.15 மணிவரை நடை திறந்திருக்கும்.

பிரதோஷ காலங்களில் காலை 7.15 முதல் 11 மணி வரை, மாலை நான்கு முதல் இரவு 8.30 வரை, பவுர்ணமி அன்று காலை 7.15மணி முதல் 11மணி வரை, மாலை நான்கு முதல் 10.30 வரை நடை திறக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT