ஆன்மிகம்

சரவணபவ என்னும் திருமந்திரம்

ஸ்ரீ விஷ்ணு

மலேசிய முருகன் குறித்து மக்களிடம் ஒரு நம்பிக்கை நிலவுகிறது. மணவயதில் உள்ள ஆண் பிள்ளைகளுக்குத் திருமணம் கை கூட வேண்டும் என்றால் அழகிய மலேசிய முருகனின் சிலை ரூபத்தை இல்லத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதே அது.

காயோராகணம் பிள்ளை

மலேசியாவில் பத்துமலையில் இருந்தது அந்தச் சிறிய குகை. அதனுள் இருந்த பாறையில் வேல் உருவம் பளிச்சிட்டது. இதனைக் கண்ட தமிழர் ஒருவர். அதனருகில் மூங்கிலால் வேல் செய்து வைத்தார். பின்னர் உலோக வேல், வழிபாட்டுக்கு உரித்தானது.

இந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த திருமலைராயன் பட்டினத்தைச் சேர்ந்த காயோராகணம் பிள்ளை, பத்துமலைக் குகை முருக பெருமானுக்குத் திருக்கோயில் ஒன்றை 1891-ல் கட்டினார். நானூறு அடி உயரத்தில் இருந்த இக்கோயிலுக்குச் செல்லும் பாதை கடந்த நூற்றாண்டில் கரடு முரடாக இருந்துள்ளது. பின்னர் நாற்பதுகளில் 272 படிகள் கொண்ட மூன்று நடைபாதைகள் கட்டப்பட்டன.

140 அடி முருகன் சிலை

காண்போர் கண்ணுக்கும் சிந்தைக்கும் வியப்பளிக்கும் உலகிலேயே மிகப் பெரிய முருகன் சிலை 140 அடி முருகன் சிலை இவ்வழியின் ஆரம்பத்திலேயே அமைந்துள்ளது. இப்பெருமான் ‘தகதக’ என்று தங்கம் போல் மின்னுகிறார். வலக் கையில் மிகப் பெரிய வேலைக் கையில் பிடித்து நிமிர்ந்த நிலையில் காட்சி அளிக்கிறார்.

SCROLL FOR NEXT