வல்லி நாயிகா சமேத பாடலாத்ரி நரசிம்ம சுவாமி கொலு வீற்றிருக்கும், சென்னையை அடுத்த சிங்கப் பெருமாள் கோவில் திருக்கோவில் பிரம்மோத்ஸவம் மே மாதம் 30-ம் தேதி,வெள்ளிக்கிழமையன்று தொடங்குகிறது. பின்னர் சிம்ம வாகனத்தை அடுத்து 4.6.14 அன்று கருட சேவை. தொடர்ந்து ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம், சந்திர பிரபை, நாச்சியார் திருக்கோலம், வாண வேடிக்கையுடன் யாளி, யானை வாகனங்கள் ஆகிய வற்றில் பெருமாள் எழுந்தருளி வருவார்.
ஸ்ரீஅஹோபில
ஜூன் எட்டாம் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று திருத்தேர் பவனி உண்டு. பின்னர் பல்லக்கு, குதிரை வாகனம், ஆகியவற்றில் காட்சி தரும் பெருமாள், பத்தாம் தேதி செவ்வாய் கிழமையன்று புஷ்ப பல்லாக்கில் திருவீதி உலா வருவார்.