ஆன்மிகம்

சனியைக் காலால் கட்டியவன்

ஆர்.செளந்தர்

திருத்தலம் அறிமுகம்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ஹனுமந்தன்பட்டியில் ஸ்ரீ சுயம்பு சனி பந்தன அனுமந்தராயப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

பிரம்மாஸ்திரத்தால் மூர்ச்சை ஆன லட்சுமணனையும், அவருடன் இருந்தவர்களையும் காப்பாற்றுவதற்காக சஞ்சீவி மலையை எடுத்து வரும்போது, சனீஸ்வரனுடன் நடந்த சண்டையில் அனுமன் வென்று அமர்ந்த இடம் இது. அவர் ஸ்ரீ சனி பந்த ஹனுமானாக நிற்கிறார்.

கோவில் அமைப்பு

இத்திருக்கோவிலின் மூலவராக ஸ்ரீ சனி பந்தன அனுமந்தராயப் பெருமாள், சனிபகவானை காலில் பந்தனம் செய்து நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

சிறப்பு பூஜைகள்

பிரதி மாதமும், மூலவரின் ஜென்ம நட்சத்திரமான மூல நட்சத்திர தினத்தன்று அபிஷேகம், யாகசாலை பூஜை, பிரசாத நைவேத்தியம் மற்றும் தீபாராதனை முதலிய விஷேச பூஜையும், பிரதிமாதம் அமாவாசை மற்றும் பவுர்ணமி அன்று சிறப்பு பூஜையும், பிரதி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துர்க்கைக்கு ராகுகால பூஜையும், பிரதிமாதம் இரண்டு சதுர்த்தி தினங்களில் (வளர்பிறை மற்றும் தேய்பிறை) விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சித்திரை மாதப்பிறப்பு, ஆவணி மாதத்தில் வரும் கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஐப்பசி மாதம் தீபாவளி, கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை, மார்கழி மாதத்தில் ஸ்ரீஹனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி மற்றும் கூடாரவள்ளி, தை மாதம் தைப்பொங்கல், பஙங்குனி மாதம் ஸ்ரீராம நவமி ஆகிய தினங்களில் அபிஷேம், பிரசாத நைவேத்தியம், தீபாராதனைகள் போன்ற சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் கார்த்திகை மாதத்தில் கருடபஞ்சமியன்று (வளர்பிறை பஞ்சமி) சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீ மதுரகவி சீனிவாச சித்தருக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பு பூஜைகளாக நடைபெற்று வருகின்றனர்.

SCROLL FOR NEXT