ஆன்மிகம்

ஐவருடன் அருளும் வரதன்

எம்என்எஸ்

வரம் தரும் வள்ளல் காஞ்சிபுரம் வரதராஜன் கோயில் கொண்டிருப்பது அத்திகிரி என்ற மலை. இந்த மலையை நிர்வகிக்கும் பொறுப்பு ஒரு பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த பெண்ணுக்கு மலை ஆளும் நாச்சியார் என்பது திருநாமம்.

இது பின்னர் மருவி மலையாள நாச்சியார் என்றானது. இவரைத்தான் பங்குனி உத்திரத்தன்று மணக்கிறார் அத்திகிரி மலையப்பன்.

அன்றைய தினம் இரவு பெருந்தேவி தாயார் சன்னதியில், இந்த மலையாள நாச்சியார், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் மற்றும் பெருந்தேவியுடன் பெருமாள் வரதராஜன் சிறப்பாகக் காட்சி அளிக்கிறார்.

SCROLL FOR NEXT