மேஷ ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும் 11-ல் சூரியன் புதனும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். வார ஆரம்பத்தில் இரண்டு நாட்கள் சந்திராஷ்டமம். சனியோடு சந்திரன் கூடுவதால் எச்சரிக்கையுடன் செயல்படவும். மனதில் ஏதேனும் சலனம் உண்டாகும். உடல்நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். தாய் நலனிலும் கவனம் செலுத்த வேண்டிவரும். முக்கியமான காரியங்களை ஒத்திப்போடுவது நல்லது. 14-ம் தேதி முதல் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். தொலைதூரப் பயணம் பயன்படும். தந்தையாலும், வாழ்க்கைத்துணையாலும் அனுகூலம் ஏற்படும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும்.
முக்கியஸ்தர்களது சந்திப்பு பயன்படும். 13-ம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் வாழ்க்கைத்துணை நலம் சீராகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். 15-ம் தேதி முதல் சூரியன் 12-ம் இடம் மாறி செவ்வாய், கேது ஆகியோருடன் கூடுவதால் பிள்ளைகளாலும் தந்தையாலும் அரசாங்கத்தாராலும் சில இடர்ப்பாடுகள் உண்டாகும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 15, 17 சுமாரானவை.
திசைகள்: தென்மேற்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, புகை நிறம், இளநீலம், பச்சை.
எண்கள்: 1, 4, 5, 6.
பரிகாரம்: சனிப் பிரீதியாக சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றுவது நல்லது. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் வக்கிர குருவும், 10-ல் சூரியனும் புதனும் 11-ல் செவ்வாயும் சுக்கிரனும் கேதுவும் உலவுவது சிறப்பாகும். நல்லவர்களின் தொடர்பு நலம் தரும். நல்லவர் அல்லாதவர்களை இனம் கண்டுகொண்டு அவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. வெளிவட்டாரப் பழக்கம் ஓரளவு பயன்படும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் நிர்வாகத்துறைகளைச் சேர்ந்த்வர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.
எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகளால் ஆதாயம் கிடைக்கும். 14, 15 தேதிகள் சோதனையானவை. வாரப் பின்பகுதியில் நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். தகவல் தொடர்பு இனங்களைச் சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு கூடும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் இந்தவாரம் சிறப்பானதாக இருக்கும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகள் சேர வாய்ப்பு உண்டாகும். சொத்துகளால் ஆதாயமும் கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளால் லாபம் கிடைத்துவரும். ஜலப்பொருட்களால் வருவாய் கூடும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 12, 17.
திசைகள்: வடமேற்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம், பச்சை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 5, 6, 7, 9.
பரிகாரம்: சக்தி வழிபாடு நலம் தரும்.
மிதுன ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 6-ல் சனியும், 10-ல் செவ்வாயும் கேதுவும் உலவுவதால் எதிர்ப்புகளைக் கடந்து வாழ்வில் வெற்றி பெறுவீர்கள். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றமான பாதை தெரியவரும். பண வரவு அதிகரிக்கும். நல்லவர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். ஜாதக பலமுள்ளவர்களுக்கு வெற்றியும் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் நலம் புரிவார்கள். 13-ம் தேதி முதல் சுக்கிரன் 11-ம் இடம் மாறுவதால் கலைஞர்களது நோக்கம் நிறைவேறும்.
பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை உருவாகும். பெண்களாலும் வாழ்க்கைத்துணையாலும் நலம் பெறுவீர்கள். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். 15-ம் தேதி முதல் சூரியன் 10-ம் இடம் மாறுவதால் அரசுப்பணியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை உருவாகும். தந்தையால் அனுகூலம் ஏற்படும். அரசு உதவி கிடைக்கும். முக்கியஸ்தர்களது சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 12, 15.
திசைகள்: வடமேற்கு, மேற்கு, தெற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மெரூன், நீலம், சிவப்பு, பொன் நிறம்.
எண்கள்: 3, 6, 7, 8, 9.
பரிகாரம்: விஷ்ணு துர்கைக்கோ, காளிக்கோ நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.
கடக ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும் 8-ல் புதனும் 9-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். வார ஆரம்பத்தில் சந்திரன் பலம் குறைந்து, சனியுடன் கூடுவதால் பிள்ளைகளால் மன அமைதி குறையும். உடல் நலனிலும் கவனம் தேவை. 14-ம் தேதி முதல் மனத்துணிவு பிறக்கும். காரியத்தில் முழுக்கவனம் செலுத்தி முன்னேறுவீர்கள். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். எதிர்ப்புகள் குறையும். கணவனால் மனைவிக்குக்கும் மனைவியால் கணவனுக்கும் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். வியாபாரிகள் வளர்ச்சி காண்பார்கள். கலைஞர்களுக்கு சுபிட்சம் கூடும். பெண்களின் நோக்கம் நிறைவேறும்.
புதியவர்களது நட்புறவு கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். 13-ம் தேதி முதல் சுக்கிரன் 10-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. பெண்களால் சில பிரச்சினைகள் சூழும். எச்சரிக்கை தேவை. 15-ம் தேதி முதல் சூரியன் 9-ம் இடம் மாறுவது கோசாரப்படி சிறப்பாகாது. இருந்தாலும் செவ்வாயும் சூரியனும் கேதுவும் ஒன்று கூடுவதால் தெய்வப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தந்தையால் அளவோடு நலம் ஏற்படும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 12, 15, 17.
திசைகள்: வடக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பச்சை, புகை நிறம், இளநீலம்.
எண்கள்: 4, 5, 6.
பரிகாரம்: பராசக்தியையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.
சிம்ம ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரனும் 12-ல் வக்கிர குருவும் உலவுவது சிறப்பாகும். வார ஆரம்பத்தில் சனியும் சந்திரனும் ஒன்று கூடி உங்கள் ராசிக்கு 4-ல் உலவுவதால் அலைச்சல் அதிகமாகும். கடுமையாக உழைக்க வேண்டிவரும். சுகம் குறையும். 14-ம் தேதி முதல் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். பிள்ளைகளால் அளவோடு நலம் உண்டாகும். குழந்தைகளின் நலனுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் சுபச் செலவுகளை மேற்கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற நவீன விஞ்ஞானத்துறைகள் லாபம் தரும்.
2-ல் ராகுவும், 8-ல் செவ்வாய், கேதுஆகியோரும் உலவுவதால் குடும்ப நலனில் அக்கரை தேவைப்படும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும், நீர் நிறைந்துள்ள இடங்களில் செல்லும்போதும் பாதுகாப்புத் தேவை. உடன்பிறந்தவர்களால் மன அமைதி குறையும். 13-ம் தேதி முதல் சுக்கிரன் 9-ம் இடம் மாறுவதால் தெய்வப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தர்ம குணம் வெளிப்படும். 15-ம் தேதி முதல் சூரியன் 8-ம் இடம் மாறி, செவ்வாய் கேது ஆகியோருடன் கூடுவதால் உடல் நலம் பாதிக்கும். அரசாங்கத்தாராலும் தந்தையாலும் தொல்லைகள் சூழும். பெற்றோர் நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 12, 15, 17.
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: இளநீலம், பொன் நிறம்.
எண்கள்: 3, 6.
பரிகாரம்: செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது.
கன்னி ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 6-ல் சூரியனும், புதனும், 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். நல்ல தகவல் வந்து சேரும். வெளிவட்டாரப் பழக்கம் பயன்படும். தொழிலாளர்கள், விவசாயிகள், உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். பெரியவர்களும் தனவந்தர்களும் உதவுவார்கள். தந்தை நலம் சிறக்கும். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். நிறுவன, நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.
பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். திறமை வீண்போகாது. பொன் நிறப்பொருட்கள் லாபம் தரும். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். வாரப் பின்பகுதியில் பிள்ளைகளால் முக்கியமான ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். மகப்பேறு பாக்கியம் சிலருக்கு இப்போது கிடைக்கும். மாணவர்களது நிலை உயரும். தொழில் அதிபர்கள் வளர்ச்சி காண்பார்கள். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் நிறைவேறச் சந்தர்ப்பம் கூடிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 12, 15, 17.
திசைகள்: வடக்கு, மேற்கு, கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 5, 8.
பரிகாரம்: செவ்வாய், ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது. நாகரை வழிபடவும்.