கண்ணகிக்குக் கேரளத்தில் கோவில் உண்டு என்பது பலருக்கும் தெரியும். ஆனால் உள்ள அந்தக் கோவில் திருவிழா கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் அளவுக்கு விமர்சையாக நடப்பது தெரியுமா? ஆற்றுக்காலில் உள்ள கோவிலில் கண்ணகி கேரள பக்தர்களால் கொண்டாடப்படும் விதத்தைப் பார்ப்பதற்கு முன்பு கண்ணகி கேரளத்துக்குச் சென்ற கதையைப் பார்க்கலாம்.
கோவலன் தண்டிக்கப் பட்டான். பாண்டியன் அவைக்கு வந்தாள் கண்ணகி. ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்; நின்பால் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி; கண்ணகி என்பது என் பெயரே’ என தார்மிக ஆவேசத்துடன் பொங்கி உண்மையை விளக்கினாள் கண்ணகி. நீதி தவறிய பாண்டியன் குற்ற உணர்வால் இறந்தான். அவன் மனைவியும் அந்தக் கணமே உயிரை விட்டாள்.
இருந்தாலும் கண்ணகியின் கோபம் அடங்கவில்லை. பல ஆண்டுகள் தன்னை விட்டுப் பிரிந்த கணவன், திரும்பி வந்ததால் இனி வாழ்க்கை வண்ணமயமாகும் என்று எண்ணி இருந்தாள் கண்ணகி. ஆனால் அவளது வாழ்க்கை கருகிவிட்டது. தன் வாழ்வு போலவே மதுரையையும் தீக்கிரையாக்க எண்ணம் கொண்டாள் கண்ணகி.
அறியா பாலகர்களையும், வயதானவர்களையும், கர்ப்பிணிப் பெண்களையும் தவிர மதுரையில் உள்ள அனைத்தையும் தீக்கிரையாக்கும்படி அந்தப் பத்தினித் தெய்வம் தனது கற்பாக்கினிக்கு ஆணையிட்டாள். அரசு அரண்மனை உட்பட அனைத்தும் எரிந்து சாம்பலானது. இதனை மலை மீது ஏறி நின்று பார்த்த கண்ணகி தளர்ந்த நடை கொண்டு, கால் போன போக்கில் சென்றாள்.
கிள்ளியாறு கரை ஓரமாக வந்த அவள் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தை அடுத்த ஆற்றுக்கால் என்ற ஊரை அடைந்தாள். பசியோடு அமர்ந்திருந்தாள். அருகே குடிசையில் இருந்த வயதான விவசாயி அவளைக் கண்டு ஊர், பெயர் கேட்டார். தன் கதை சொன்னாள். அதில் அவருக்கு, கண்ணகியின் மாண்பு புரிபட்டது. அவளுக்குப் பசி தீர உணவளித்தார்.
அங்கேயே தங்கிய கண்ணகி, அங்குள்ள மக்களின் துயரங்களைக் களைந்தெறிந்தாள். அம்மக்களுக்கு ஏற்பட்ட அம்மை நோய், கண்திருஷ்டி பாதிப்பு, மன அமைதிக் குறைவு, எதிரிகளால் ஏற்பட்ட தொந்தரவு, வழக்குகள், திருமணத் தடை ஆகியவைகளை நீக்கி அவர்களுக்கு விடுதலை அளித்தாள். பின்னர் அவள் காலம் இந்நிலவுகில் முடிவுற்றது.
கிள்ளியாறு கரை ஓரமாக வந்த அவள் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தை அடுத்த ஆற்றுக்கால் என்ற ஊரை அடைந்தாள். பசியோடு அமர்ந்திருந்தாள். அருகே குடிசையில் இருந்த வயதான விவசாயி அவளைக் கண்டு ஊர், பெயர் கேட்டார். தன் கதை சொன்னாள்.
அதில் அவருக்கு, கண்ணகியின் மாண்பு புரிபட்டது. அவளுக்குப் பசி தீர உணவளித்தார். அங்கேயே தங்கிய கண்ணகி, அங்குள்ள மக்களின் துயரங்களைக் களைந்தெறிந்தாள். அம்மக்களுக்கு ஏற்பட்ட அம்மை நோய், கண்திருஷ்டி பாதிப்பு, மன அமைதிக் குறைவு, எதிரிகளால் ஏற்பட்ட தொந்தரவு, வழக்குகள், திருமணத் தடை ஆகியவைகளை நீக்கி அவர்களுக்கு விடுதலை அளித்தாள். பின்னர் அவள் காலம் இந்நிலவுகில் முடிவுற்றது.
தமிழகத்தைச் சேர்ந்த இந்தக் கண்ணகியைக் கொண்டாடிய கேரள மக்கள், அவள் வாழ்ந்த ஆற்றுக்காலில் கோவில் கட்டினார்கள் என்கிறது தல புராணம். இந்தக் கோவிலுக்கான பக்தர்கள் கூட்டம் காலப்போக்கில் பல்கிப் பெருகியது. பக்தர்கள் லட்சக்கணக்கில் அலைமோதினார்கள். ஆற்றுக்கால் பகவதி என்று கண்னகி அழைக்கப்பட்டாள். `எஞ்ஞகள் அம்மைக்கு பொங்காலே` என்று கண்ணகியைக் கொண்டாடுகிறார்கள்.
இன்றும் ஆண்டுதோறும் பொங்கல் வைத்துப் படைக்கிறார்கள். இந்த பொங்காலே விழா கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டும் மார்ச் 5 ம் தேதி இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்தத் திருக்கோவிலில் இலக்கியமான சிலப்பதிகாரம், உபன்யாசம், ஹரி கதை, கதகளி என பல வகை கலைநிகழ்ச்சிகளின் கருப் பொருளாகி மலையாள மொழியில் இன்றும் நிகழ்த்தப்படுகிறது.