துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 6-ல் கேது, 10-ல் வக்கிர குருவும் உலவுவதால் முக்கியமான ஓரிரு எண்ணங்கள் இப்போது நிறைவேறும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். வாழ்க்கைத் துணையால் அனுகூலம் உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். மனதில் துணிவு பிறக்கும். எதிர்ப்புகள் குறையும். தொலைதூரத் தொடர்பு ஓரளவு பயன்படும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம்.
கடல் வாணிபம் லாபம் தரும். வெண்மையான பொருட்கள் லாபம் தரும். பிள்ளைகளால் ஓரிரு நன்மைகள் உண்டாகும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. வீண் செலவுகளைத் தவிர்ப்பது அவசியம். பயணத்தின்போது பாதுகாப்புத் தேவை. அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாகப் பேசிப் பழகுவது அவசியம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். நண்பர்கள், உறவினர்களால் தொல்லைகள் சூழும். உடன்பிறந்தவர்களால் செலவுகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான நாட்கள்: பிப்ரவரி 2, 3.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, வான் நீலம், பொன் நிறம்.
எண்கள்: 3, 6, 7.
பரிகாரம்: மகாவிஷ்ணு, துர்கைக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் வக்கிர புதனும் 3-ல் சூரியனும் 4-ல் சுக்கிரனும் 9-ல் குருவும் 11-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. நல்லவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நற்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கூட்டாளிகளால் அனுகூலம் ஏற்படும். வியாபாரம் பெருகும். பணப் புழக்கம் சற்று அதிகரிக்கும். அரசியல், நிர்வாகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு கூடும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். கேளிக்கை, உல்லாசங்களில்
ஈடுபாடு கூடும். விருந்து, உபசாரங்களில் நாட்டம் அதிகரிக்கும். பயணத்தால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களால் நலம் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். ஜன்ம ராசியில் சனியும், 5-ல் கேதுவும் இருப்பதால் உழைப்பு அதிகரிக்கும். மனதில் ஏதேனும் சலனம் உண்டாகும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பிள்ளைகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும்.
அதிர்ஷ்டமான நாட்கள்: ஜனவரி 30, பிப்ரவரி 3.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, வெண்சாம்பல் நிறம், இளநீலம்.
எண்கள்: 1, 3, 4, 6.
பரிகாரம்: சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. விநாயகர், ஆஞ்சநேயரை வழிபடவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. எதிர்ப்புகளை வெல்லும் பராக்கிரமம் உண்டாகும். வழக்கில் வெற்றி கிட்டும். விளையாட்டு விநோதங்களில் ஈடுபாடு கூடும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். திடீர்ப் பொருள்வரவு உண்டாகும். முயற்சி வீண்போகாது. கணவன்-மனைவி உறவு நிலை திருப்தி தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். பயணத்தால் அனுகூலம் ஏற்படும். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள்.
4-ல் கேதுவும் 12-ல் சனியும் உலவுவதால் உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். தாய் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டிவரும். வேலையாட்களால் தொல்லைகள் அதிகரிக்கும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வதும் நல்லது. வீண்வம்பு வேண்டாம். புதன் பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.
அதிர்ஷ்டமான நாட்கள்: ஜனவரி 30, பிப்ரவரி 2 (முற்பகல்).
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: இளநீலம், சிவப்பு, வெண்மை.
எண்கள்: 4, 6, 9.
பரிகாரம்: புதன், சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவவும்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் சனி 11-ல் இருப்பது சிறப்பு. ராசிநாதனும் குருவும் ராசியைப் பார்ப்பதும் குறிப்பிடத்தக்கது. சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் புத்திசாலித்தனம் பளிச்சிடும். தொழிலில் வெற்றி கிட்டும். புதிய முயற்சிகள் கைகூடும். குடும்பத்தில் குதூகலம் கூடும். சுப காரியங்கள் நிகழும். எதிர்ப்புகள் அகலும். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். பிறரது பாராட்டுகளைப் பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். பொது நலப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். செல்வ நிலை உயரும்.
திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். ஆன்மிக, அறநிலையப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சூரியன் ஜன்ம ராசியில் இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். உஷனாதிக்கம் கூடும். புதன் பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டப்படாமல் தப்பலாம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். நண்பர்கள், உறவினர்களால் ஓரளவு நலம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான நாட்கள்: ஜனவரி 30, பிப்ரவரி 2, 3.
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, மெரூன்.
எண்கள்: 6, 7, 8.
பரிகாரம்: திருமாலை வழிபடவும். ஆதித்ய ஹ்ருதயம் படிப்பதும் கேட்பதும் நல்லது.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 6-ல் வக்கிர குருவும், 10-ல் ராசிநாதன் சனியும், 11-ல் வக்கிர புதனும் உலவுவது சிறப்பு. தர்ம குணம் வெளிப்படும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பிறர் போற்றும்படி ஓரிரு சாதனைகளை ஆற்றுவீர்கள். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். பெண்களின் நிலை உயரும். உடல் நலம் சீராகும். எதிர்ப்புகள் குறையும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். வியாபாரத்தில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். மாணவர்களது நிலை உயரும்.
பிள்ளைகளால் அளவோடு நலம் உண்டாகும். 2-ல் கேது, 8-ல் ராகு, 12-ல் சூரியன் உலவுவதால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். பயணத்தால் சங்கடம் ஏற்படும். புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. விஷத்தாலும் விஷ ஜந்துக்களாலும் பாதிக்கப்பட நேரலாம் என்பதால் விழிப்புத் தேவை. அரசுப்பணியாளர்கள், நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றம் காணத் தடைகளும் குறுக்கீடுகளும் உண்டாகும். அரசு அபராதம் கட்ட நேரலாம். கண் சம்பந்தமான உபத்திரவங்கள் ஏற்படும். பெற்றோர் நலனில் அக்கறை தேவை.
அதிர்ஷ்டமான நாட்கள்: ஜனவரி 30, பிப்ரவரி 2, 3.
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, மேற்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை.
எண்கள்: 5, 6, 8.
பரிகாரம்: சூரியன், ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 10-ல் புதன், 11-ல் சூரியன், 12-ல் சுக்கிரன் உலவுவது சிறப்பு. முன்னேற்றத்துக்கான தகவல் வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். மாணவர்களது திறமை பளிச்சிடும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். பரம்பரைத் தொழிலிலும், சொந்தத் தொழிலும் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். மகப்பேறு பாக்கியம் கிட்டும். பிள்ளைகளால் அனுகூலமும் உண்டாகும். கலைத்துறை ஊக்கம் தரும்.
பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிட்டும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும். மந்திர உபதேசம் பெற வாய்ப்பு உருவாகும். அரசு உதவி கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். ராகு, கேது, செவ்வாய் ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும் போதும் பாதுகாப்பு அவசியம் தேவை. கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் கலகம் ஏற்படும். வீண்சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்டமான நாட்கள்: ஜனவரி 30, பிப்ரவரி 2, 3.
திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: இளநீலம், பச்சை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 5, 6.
பரிகாரம்: விநாயகர், துர்கை, சுப்பிரமணியர் ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்து கொள்வது நல்லது.