துலாம் ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு மூன்றில் சூரியனும் நான்கில் புதன், சுக்கிரன் ஆகியோரும், ஆறில் கேதுவும் உலவுவது சிறப்பாகும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். அரசு உதவி கிடைக்கும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். பெண்களுக்கு நினைத்தவை பலிதமாகும்.
புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். மாணவர்களது நிலை உயரும். பயணத்தில் பாதுகாப்பு தேவை. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. 11-ம் தேதி முதல் புதன் வக்கிர நிலை பெறுவதால் மாணவர்களும், வியாபாரிகளும் பொறுப்பாக செயல்பட வேண்டும். பேச்சில் நிதானம் தேவை. வீண்வம்பு கூடாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 8, 11, 12.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, மெரூன், வெண்மை, வான் நீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 5, 6, 7.
பரிகாரம்: துர்க்கைக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. துர்கா கவசம் படிக்கவும்.
விருச்சிக ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு மூன்றில் சுக்கிரனும் ஒன்பதில் குருவும் 11-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். வார முன்பகுதியில் சந்திரனின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் தொலைதூரத் தொடர்பு பயன்படும். காரியத்தில் வெற்றி கிட்டும். பொருள்வரவு அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டு. தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். நல்ல தகவல் வந்து சேரும்.
பயணத்தால் அனுகூலம் உண்டு. போக்குவரத்துத் துறையினர் வளர்ச்சி காண்பார்கள். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். சிக்கனம் தேவை. அலைச்சலும் உழைப்பும் அதிகரிக்கும். பேச்சில் சூடான வார்த்தைகளை உதிர்க்கலாகாது. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 11, 12.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், இளநீலம்.
எண்கள்: 4, 6.
பரிகாரம்: புதன், சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது.
தனுசு ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு இரண்டில் புதனும் சுக்கிரனும் மூன்றில் செவ்வாயும் எட்டில் வக்கிர குருவும் பத்தாம் இடத்தில் ராகுவும் உலவுவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு ஆக்கம் தரும். வியாபாரத்தில் விருத்தி காணலாம். மாணவர்களது நிலை உயரும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும்.
கணவன், மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத்தொழில் லாபம் தரும். இயந்திரப்பணியாளர்கள் ஆகியோர் வளர்ச்சி காண்பார்கள். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். பொருளாதார நிலை உயரும். தாய் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். வாரப் பின்பகுதியில் முக்கியமான எண்ணங்கள் ஈடேற வழிபிறக்கும். நிலபுலங்களால் ஆதாயம் கிடைத்துவரும் என்றாலும் சில இடர்ப்பாடுகளும் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 11, 12.
திசைகள்: தென்மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: பச்சை, இளநீலம், சிவப்பு, வெண்மை.
எண்கள்: 4, 5, 6, 9.
பரிகாரம்: சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவி செய்யவும்.
மகர ராசி வாசகர்களே!
உங்கள் ராசியில் சுக்கிரனும் மூன்றில் கேதுவும் 11-ல் சனியும் உலவுவதால் நல்லவர்களின் தொடர்பால் நலம் பெறுவீர்கள். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். பெண்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். ஆன்மிக ஈடுபாடு உள்ளவர்களுக்குத் தெளிவான மனநிலை அமையும்.
பொது நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். தர்ம குணம் வெளிப்படும். குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். அக்கம்பக்கத்தவரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. கண் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். நிலபுலங்கள் மூலம் வருவாய் பெற வாய்ப்பு உண்டாகும். தந்தை நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 11, 12.
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, மெரூன்.
எண்கள்: 6, 7, 8.
பரிகாரம்: சூரிய வழிபாடு செய்வது நல்லது. ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும் கேட்கவும் செய்யலாம்.
கும்ப ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 10-ல் சனியும், 11-ல் சூரியனும் 12-ல் சுக்கிரனும் உலவுவதால் எடுத்த காரியத்தில் எப்பாடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். அரசுதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கும் மதிப்பும் உயரும். முக்கியஸ்தர்களது தொடர்பு பயன்படும்.
எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. பயணத்தின்போது பாதுகாப்பு தேவை. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம். வீண்சண்டை, சச்சரவுகளைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைவராலும் தந்தையாலும் எண்ணங்கள் ஈடேறும்.
அதிர்ஷ்டமான தேதிகள்:
ஜனவரி 8, 14 தேதிகள் சுமாரானவை.
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, மேற்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, வெண்மை, நீலம்.
எண்கள்: 1, 6, 8 .
பரிகாரம்: துர்க்கையையும் விநாயகரையும் திருமாலையும் வழிபடுவது நல்லது. வெளியில் புறப்படும்போது குடும்பப் பெரியவர்களையும், குல தெய்வத்தையும் வணங்கிவிட்டுச் செல்லவும்.
மீன ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியனும் 11-ல் புதனும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். மக்களால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். முக்கியஸ்தர்களது தொடர்பு பயன்படும். காரியத்தில் வெற்றி கிட்டும். வியாபாரம் லாபம் தரும். கணிதம், எழுத்துத் துறையினர் லாபம் அடைவார்கள். கலைஞர்களது நோக்கம் நிறைவேறும்.
மாதர்களது எண்ணம் ஈடேறும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். வாழ்க்கைத்துணை நலம் சீராகும். அலைச்சல் கூடும். பயணத்தால் சிறு சங்கடம் உண்டாகும். இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. கோபத்தைக்குறைத்துக் கொள்ளவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜனவரி 11, 12.
திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: இளநீலம், பச்சை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 5, 6. வார முன்பகுதியில் எண் 2-ம் நலம் தரும்.
பரிகாரம்: செவ்வாய், ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது அவசியமாகும். சுப்பிரமணிய புஜங்கம் வாசிப்பதும் கேட்பதும் நல்லது. நாகரை வழிபடவும். இளைஞர்களுக்கு உதவி செய்யவும்.