ஆன்மிகம்

ஆகாரத்திற்கு ஆதாரமானது மழை

நாரணோ ஜெயராமன்

மனிதர்கள் வேண்ட வேண்டியது என்ன?

தான்,பிறர் இரண்டுபேரின் நலனுக்காக ஈடுபடும் ஜன்மம்

திருடர்கள் யார்?

புலன்களை இழுத்துக்கொண்டு போகும் விஷயங்கள்தான்.

விரோதி யார்?

சோம்பேறித்தனமே.

அறிவின்மை யாது?

தேர்ச்சியிலிருந்தும் பயிற்சியின்றி இருத்தல்.

தாமரையிலைத் தண்ணீர் போல் நிலையில்லாதன எவை?

இளமை, செல்வம், ஆயுள்.

நரகம் யாது?

பிறர் வசமாயிருத்தல்.

எது அனர்த்தத்தைக் குறிக்கும்?

அகம்பாவம்.

விலை மதிக்கப்படாதது எது?

தக்க சமயத்தில் கொடுத்தது.

சாகும்வரையில் குத்துவது எது?

ரகசியத்தில் செய்த பாபம்.

உயிர் போவதாயிருந்தாலும் எவனுடைய ஆத்மாவை நல்வழிப்படுத்த முடியாது?

மூர்க்கர்கள், நித்ய சந்தேகி, எப்பொழுதும் குறைசொல்லி துக்கம் உடையவர்கள், நன்றி இல்லாதவர்கள்.

ஜீவராசிகள் எவனுக்கு வசமாகும்?

சத்யமும் பிரியமுமான வசனமுடைய வணக்கமுள்ளவனுக்கு.

மனிதர்களால் சம்பாதிக்கத்தக்கது எது?

கல்வி, செல்வம், வலிமை, புகழ், புண்ணியம் இவையே.

உடலெடுத்தோருக்குப் பெரிய பாக்கியம் எது?

ஆரோக்கியம்

அன்னதானத்திற்குத் தகுதியானவன் யார்?

பசியுள்ளவன்

ஆகாரத்துக்கு ஆதாரமானது எது?

மழை

சிந்தாமணி போல் கிடைத்தற்கரியது எது?

சதுர்பத்ரம் (பத்திரமாக இருப்பது)

அந்த சதுர்பத்ரம் என்றால் என்ன?

பிரிய வாக்குடன் தானம், கர்வமில்லா ஞானம், பொறுமையுடன் கூடிய வீரம், தியாகத்துடன் கூடிய செல்வம் ஆகிய இந்த நான்கு சுபங்களும் கிடைத்தல் அரிது.

ஆதிசங்கரரின் ப்ரஸ்னோத்தர ரத்ன மாலிகை நூலிலிருந்து

SCROLL FOR NEXT